Search

Saved articles

You have not yet added any article to your bookmarks!

Browse articles

GDPR Compliance

We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

அதிகாலை 3.15 மணிக்கே வர்த்தகம்

அதிகாலை 3.15 மணிக்கே வர்த்தகம்

ஆசியா, ஐரோப்பா, அமெரிக்கா ஆகிய நாடுகளின் பங்குச் சந்தைகள் வெவ்வேறு நேரங்களில் செயல்படுகின்றன.

பகிரவும் WhatsApp Facebook

வெளிநாட்டு முதலீட்டாளர்களுக்கு கூடுதல் வாய்ப்பு அளிக்கும் வகையில், என்எஸ்இ சர்வதேச பங்குச் சந்தையின் வர்த்தக நேரம் நீட்டிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவின் என்எஸ்இ சர்வதேச பங்குச் சந்தையில் (NSEIX) இனி தினமும் 23 மணி நேரம் 30 நிமிடங்கள் வர்த்தகம் நடைபெறும். புதிய நடைமுறை நவம்பர் 2-ம் தேதி முதல் அமலுக்கு வந்துள்ளது.

குஜராத்தின் கிஃப்ட் சிட்டியில் செயல்படும் இந்தச் சந்தையில், இந்திய நேரப்படி அதிகாலை 3.15 மணிக்குத் தொடங்கும் வர்த்தகம், மறுநாள் அதிகாலை 2.45 மணி வரை நடைபெறும். இதன்மூலம் கிட்டத்தட்ட நாள் முழுவதும் வர்த்தகம் செய்யும் வாய்ப்பு உருவாகியுள்ளது.

ஆசியா, ஐரோப்பா, அமெரிக்கா ஆகிய நாடுகளின் பங்குச் சந்தைகள் வெவ்வேறு நேரங்களில் செயல்படுகின்றன. புதிய நடைமுறையால் அந்தச் சந்தைகளில் ஏற்படும் மாற்றங்களுக்கு ஏற்ப முதலீட்டாளர்கள் உடனடியாக முடிவெடுக்க முடியும்.

குறிப்பாக, வெளிநாட்டு முதலீட்டாளர்கள், பெரிய முதலீட்டு நிறுவனங்கள், சர்வதேச வர்த்தகர்களுக்கு இந்த மாற்றம் பயனுள்ளதாக இருக்கும். உலகளவில் ஏற்படும் பொருளாதார மாற்றங்களால் உருவாகும் முதலீட்டு அபாயங்களையும் விரைவாகக் கையாள முடியும்.

இதற்கிடையே, கிஃப்ட் நிஃப்டி வர்த்தகம் காலை 6.30 மணிக்குப் பதிலாக 5.15 மணிக்கே தொடங்குகிறது. இதனால் இந்தியப் பங்குச் சந்தை காலை 9.15 மணிக்குத் திறப்பதற்கு முன்பே சர்வதேச சந்தைகளின் போக்கை அறிய முடியும்.

இதுகுறித்து என்எஸ்இ சர்வதேச பங்குச் சந்தையின் நிர்வாக இயக்குநர் வி.பாலசுப்பிரமணியம் கூறுகையில், ‘‘உலகின் அனைத்து நேர மண்டலங்களிலும் முதலீட்டாளர்களுக்கு வர்த்தக வாய்ப்புகளை வழங்குவது முக்கிய மைல்கல்.’’ என்றார்.

நீட்டிக்கப்பட்ட வர்த்தக நேரத்துக்கு ஏற்ப தொழில்நுட்ப வசதிகளும் மேம்படுத்தப்பட்டுள்ளன. வர்த்தக அமர்வுகளுக்கு இடையே 3 நிமிடங்களுக்குள்ளும், நாள் முடிவில் 15 நிமிடங்களுக்குள்ளும் தொழில்நுட்பப் பராமரிப்புப் பணிகளை முடிக்க முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நடவடிக்கை சர்வதேச நிதி மையமாக கிஃப்ட் சிட்டியின் முக்கியத்துவத்தை மேலும் உயர்த்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.

முந்தைய செய்தி
9 நிறுவனப் பங்குகள் 67% வரை உயர வாய்ப்பு
அடுத்த செய்தி
ஏற்றப் பாதையில் ஏசிஇ பங்கு

தொடர்புடைய செய்திகள்