Search

Saved articles

You have not yet added any article to your bookmarks!

Browse articles

GDPR Compliance

We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

அப்போலோ மருத்துவமனை நிகர லாபம் 32% உயர்வு

அப்போலோ மருத்துவமனை நிகர லாபம் 32% உயர்வு

நிறுவனத்தின் மொத்த வருவாய் 23 சதவீதம் உயர்ந்து ரூ.7,615 கோடியைத் எட்டியுள்ளது.

பகிரவும் WhatsApp Facebook

தனியார் மருத்துவச் சேவை நிறுவனமான அப்போலோ ஹாஸ்பிடல்ஸ், நடப்பு நிதியாண்டின் இரண்டாம் காலாண்டில் தனது நிகர லாபம் 32 சதவீதம் அதிகரித்து, ரூ.630 கோடியை எட்டியுள்ளதாக அறிவித்துள்ளது.

கடந்த செப்டம்பர் மாதத்துடன் முடிவடைந்த நடப்பு நிதியாண்டின் இரண்டாம் காலாண்டு நிதிநிலை முடிவுகளை அப்போலோ நிர்வாகம் வெளியிட்டுள்ளது. இதன்படி, கடந்த ஆண்டின் இதே காலாண்டில் ரூ.477 கோடியாக இருந்த நிறுவனத்தின் ஒருங்கிணைந்த நிகர லாபம், தற்போது 32 சதவீதம் உயர்ந்து ரூ.630 கோடியாக அதிகரித்துள்ளது. நிறுவனத்தின் மொத்த வருவாய் 23 சதவீதம் உயர்ந்து ரூ.7,615 கோடியைத் எட்டியுள்ளது.

நாடு முழுவதும் உள்ள அப்போலோ மருத்துவமனைகளில் உள்நோயாளிகள் படுக்கை பயன்பாடு 73 சதவீதமாக உயர்ந்ததும், புற்றுநோய் மற்றும் இதயவியல் உள்ளிட்ட உயர் சிறப்பு சிகிச்சைப் பிரிவுகளின் சிறப்பான வளர்ச்சியுமே இந்த லாப உயர்வுக்கு முக்கியக் காரணமாகும். மேலும், சிகிச்சைக்காக இந்தியா வந்த வெளிநாட்டு நோயாளிகளின் எண்ணிக்கை 37 சதவீதம் உயர்ந்ததும், மருத்துவப் பரிசோதனை மற்றும் மருந்தகப் பிரிவுகளின் வலுவான செயல்பாடுகளும் இந்த வளர்ச்சிக்கு உறுதுணையாக இருந்துள்ளன.

முந்தைய செய்தி
Collector inspects development works in Tiruppur district
அடுத்த செய்தி
ரூ.9,500 கோடி நிதி திரட்ட தமிழக அரசு முடிவு: ஆர்பிஐ மூலம் நவ. 9-ல் பத்திரங்கள் ஏலம்

தொடர்புடைய செய்திகள்