Search

Saved articles

You have not yet added any article to your bookmarks!

Browse articles

GDPR Compliance

We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

ரூ.9,500 கோடி நிதி திரட்ட தமிழக அரசு முடிவு: ஆர்பிஐ மூலம் நவ. 9-ல் பத்திரங்கள் ஏலம்

ரூ.9,500 கோடி நிதி திரட்ட தமிழக அரசு முடிவு: ஆர்பிஐ மூலம் நவ. 9-ல் பத்திரங்கள் ஏலம்

இந்த அரசுப் பத்திரங்களுக்கான ஏலம், மும்பையில் உள்ள இந்திய ரிசர்வ் வங்கி மூலம் வரும் 9-ம் தேதி நடக்கிறது.

பகிரவும் WhatsApp Facebook

மாநில அரசின் நிதி தேவைகளுக்காக, ரூ.9,500 கோடி மதிப்பிலான அரசுப் பிணையப் பத்திரங்களை இந்திய ரிசர்வ் வங்கி மூலம் வரும் 9-ம் தேதி ஏலம் விட உள்ளதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.

இது தொடர்பாக தமிழக அரசின் நிதித்துறை கூடுதல் தலைமைச் செயலர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: தமிழக அரசு மொத்தம் ரூ.9,500 கோடி நிதியைத் திரட்டும் வகையில், அரசுப் பத்திரங்களை மறுவெளியீடு செய்து, ஏலம் மூலம் விற்பனை செய்ய திட்டமிட்டுள்ளது. 


அதன்படி, ரூ.2,000 கோடிக்கு 2041-ம் ஆண்டு முதிர்வடையும் 7.80 சதவீத வட்டி விகிதப் பத்திரங்கள், ரூ. 2,500 கோடிக்கு 2046-ம் ஆண்டு முதிர்வடையும் 8.14 சதவீத வட்டி விகிதப் பத்திரங்கள், ரூ.2,500 கோடிக்கும் 2051-ல் முதிர்வடையும் 8.21 சதவீத வட்டி விகிதப் பத்திரங்கள் மற்றும் ரூ.2,500 கோடிக்கு 2056-ம் ஆண்டு முதிர்வடையும் 8.18 சதவீத வட்டி விகிதப் பத்திரங்கள் ஏலம் விடப்பட உள்ளன.

இந்த அரசுப் பத்திரங்களுக்கான ஏலம், மும்பையில் உள்ள இந்திய ரிசர்வ் வங்கி மூலம் வரும் 9-ம் தேதி நடக்கிறது. இதில் பங்கேற்க விரும்பும் முதலீட்டாளர்கள், ரிசர்வ் வங்கியின் 'இ-குபேர்' எனப்படும் மின்னணு சேவை வழியாக, தங்கள் ஏலக் கேட்புகளைச் சமர்ப்பிக்க வேண்டும். 

போட்டியற்ற ஏலக் கேட்புகளை காலை 10.30 மணி முதல் 11.00 மணி வரையிலும், போட்டியுள்ள ஏலக் கேட்புகளை காலை 10.30 மணி முதல் 11.30 மணி வரையிலும் சமர்ப்பிக்க வேண்டும். இவ்வாறு செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முந்தைய செய்தி
அப்போலோ மருத்துவமனை நிகர லாபம் 32% உயர்வு
அடுத்த செய்தி
ரூ.3.6 லட்சத்துக்கு சின்ன வெங்காயம் ஏலம்

தொடர்புடைய செய்திகள்