Search

Saved articles

You have not yet added any article to your bookmarks!

Browse articles

GDPR Compliance

We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

தீபாவளியன்று 1 மணி நேரம் சிறப்பு பங்கு வர்த்தகம்

தீபாவளியன்று 1 மணி நேரம் சிறப்பு பங்கு வர்த்தகம்

வழக்கமான விடுமுறை நாளிலும் இந்தச் சிறப்பு வர்த்தகம் நடைபெறுவது குறிப்பிடத்தக்கது.

பகிரவும் WhatsApp Facebook

தீபாவளி பண்டிகையையொட்டி, தேசிய பங்குச் சந்தை (என்எஸ்இ), மும்பை பங்குச் சந்தை (பிஎஸ்இ), பல்சரக்கு வர்த்தகச் சந்தை (எம்சிஎக்ஸ்) ஆகியவற்றில் நவம்பர் 8-ம் தேதி ஞாயிற்றுக்கிழமை ஒரு மணி நேரம் சிறப்பு முகூர்த்த வர்த்தகம் நடைபெறுகிறது.

இந்தியாவில் தீபாவளியன்று முகூர்த்த வர்த்தகம் மேற்கொள்வது நீண்டகால பாரம்பரியமாக இருந்து வருகிறது. ஆண்டுதோறும் லட்சுமி பூஜையன்று நடைபெறும் இந்த ஒரு மணி நேர வர்த்தகம் மிகவும் மங்களகரமானதாகக் கருதப்படுகிறது.


இந்த நேரத்தில் பங்குகளை வாங்கினால், ஆண்டு முழுவதும் செல்வமும் வளமும் பெருகும் என்பது முதலீட்டாளர்களின் நம்பிக்கையாக உள்ளது.
இதனால், ஏராளமான முதலீட்டாளர்கள் லட்சுமி தேவிக்கு நன்றி செலுத்தும் அடையாளமாகக் குறைந்த அளவிலாவது பங்குகளை வாங்குவது வழக்கம்.


முகூர்த்த வர்த்தகத்துக்கான நேரத்தைப் பங்குச் சந்தைகள் ஆண்டுதோறும் அறிவிக்கின்றன. வழக்கமான விடுமுறை நாளிலும் இந்தச் சிறப்பு வர்த்தகம் நடைபெறுவது குறிப்பிடத்தக்கது.

தீபாவளி முகூர்த்த வர்த்தகம் 2026
நவம்பர் 8, ஞாயிற்றுக்கிழமை

அனைத்து நேரங்களும் இந்திய நேரப்படி (IST)
வர்த்தக நிகழ்வு 
                                              தொடக்கம் முடிவு
பெரிய அளவிலான பங்கு பரிவர்த்தனை     மதியம் 1:50 2:05
முன்கூட்டிய ஆர்டர் பதிவு                                     2:05 2:10
வரம்பு விலை ஆர்டர் பதிவு                                  2:10 2:15
ஆர்டர் பொருத்துதல்                                              2:15 2:17
முன்வர்த்தக இடைவெளி                                      2:17 2:20
வழக்கமான பங்கு வர்த்தகம்                              2:20 3:15
இறுதி ஏலத்துக்கான மாற்றம்                             3:15 3:20
இறுதி ஏல ஆர்டர் பதிவு                                         3:20 3:30
இறுதி ஏல ஆர்டர் பொருத்துதல்                         3:30 3:35
இறுதி ஏல மாற்ற நேரம்                                        3:35 3:50
வர்த்தகத்துக்குப் பிந்தைய அமர்வு                   3:50 4:00

முந்தைய செய்தி
டிவிடெண்ட் மழையில் பொதுத்துறை பங்குகள்
அடுத்த செய்தி
முதலீட்டாளர்கள் கவனத்திற்கு- சாத்விக் கிரீன் எனர்ஜி லாபம் 76% சரிவு

தொடர்புடைய செய்திகள்