Search

Saved articles

You have not yet added any article to your bookmarks!

Browse articles

GDPR Compliance

We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

முதலீட்டாளர்கள் கவனத்திற்கு- சாத்விக் கிரீன் எனர்ஜி லாபம் 76% சரிவு

முதலீட்டாளர்கள் கவனத்திற்கு- சாத்விக் கிரீன் எனர்ஜி லாபம் 76% சரிவு

நிறுவனத்தின் செயல்பாட்டு வருவாய் ரூ.768 கோடியிலிருந்து ரூ.902.6 கோடியாக உயர்ந்துள்ளது.

பகிரவும் WhatsApp Facebook

சூரிய மின்சக்தி உற்பத்தி உபகரண நிறுவனமான சாத்விக் கிரீன் எனர்ஜியின் நிகர லாபம், நடப்பு நிதியாண்டின் இரண்டாவது காலாண்டில் 76 சதவீதம் சரிந்து ரூ.20.2 கோடியாக உள்ளது.

கடந்த நிதியாண்டின் இதே காலாண்டில் நிறுவனம் ரூ.84.7 கோடி நிகர லாபம் ஈட்டியிருந்தது. இருப்பினும், நிறுவனத்தின் செயல்பாட்டு வருவாய் ரூ.768 கோடியிலிருந்து ரூ.902.6 கோடியாக உயர்ந்துள்ளது.


இதுகுறித்து நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி பிரசாந்த் மாத்தூர் கூறுகையில், ‘‘குறுகிய கால லாபத்தைவிட நீண்டகால வளர்ச்சிக்கான முதலீடுகளுக்கு முன்னுரிமை அளித்துள்ளோம். அரசு, மின்சார நிறுவனங்கள் மற்றும் தொழில் நிறுவனங்களிடமிருந்து தொடர்ந்து பெரிய அளவில் ஆர்டர்கள் கிடைத்து வருகின்றன’’ என்றார்.


செப்டம்பர் மாத நிலவரப்படி, நிறுவனத்தின் உறுதிசெய்யப்பட்ட ஆர்டர் மதிப்பு 6.68 ஜிகாவாட் திறனுக்கானதாக உள்ளது.

முந்தைய செய்தி
தீபாவளியன்று 1 மணி நேரம் சிறப்பு பங்கு வர்த்தகம்
அடுத்த செய்தி
Tata Motors பங்குக்கு ரூ.511 இலக்கு: Nomura கணிப்பு

தொடர்புடைய செய்திகள்