Search

Saved articles

You have not yet added any article to your bookmarks!

Browse articles

GDPR Compliance

We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

புதிய யூனிகார்ன் அந்தஸ்து ஸ்டார்ட்அப் - பிரிட்டனை முந்தியது இந்தியா

புதிய யூனிகார்ன் அந்தஸ்து ஸ்டார்ட்அப் - பிரிட்டனை முந்தியது இந்தியா

சந்தை மதிப்பு 1 பில்லியன் அமெரிக்க டாலரை எட்டினால், அந்த நிறுவனம் 'யூனிகார்ன்' என அழைக்கப்படுகிறது.

பகிரவும் WhatsApp Facebook

உலகளவில் அடுத்த மூன்று ஆண்டுகளில் யூனிகார்ன் அந்தஸ்தை பெற வாய்ப்புள்ள ஸ்டார்ட்அப்களின் எண்ணிக்கையில், பிரிட்டனை பின்னுக்கு தள்ளி இந்தியா மூன்றாவது இடத்தைப் பிடித்துள்ளது.

ஒரு ஸ்டார்ட் அப் நிறுவனம் பங்குச் சந்தையில் பட்டியலிடப்படுவதற்கு முன்பே, அதன் சந்தை மதிப்பு 1 பில்லியன் அமெரிக்க டாலரை (இந்திய மதிப்பில் சுமார் ரூ.9,500 கோடி) எட்டினால், அந்த நிறுவனம் 'யூனிகார்ன்' என அழைக்கப்படுகிறது.

 
இந்நிலையில், ஏஎஸ்கே பிரைவேட் வெல்த் மற்றும் ஹுருன் இந்தியா இணைந்து வெளியிட்ட 2026-ம் ஆண்டுக்கான ‘ஹுருன் இந்தியா எதிர்கால யூனிகார்ன் நிறுவனங்கள் குறியீடு’ பட்டியலில் இந்தியாவைச் சேர்ந்த 51 நிறுவனங்கள் இடம் பெற்றுள்ளன. கடந்த ஆண்டு இந்த எண்ணிக்கை 47 ஆக இருந்தது. அமெரிக்கா 302 நிறுவனங்களுடன் முதலிடத்திலும், சீனா 278 நிறுவனங்களுடன் இரண்டாவது இடத்திலும் உள்ளன.


2000-ம் ஆண்டுக்குப் பிறகு தொடங்கப்பட்டு, ஒரு பில்லியன் டாலருக்கும் குறைவான மதிப்பீட்டைக் கொண்ட தனியார் நிறுவனங்கள் இந்தப் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளன. அடுத்த 3 ஆண்டுகளில் யூனிகார்ன் அந்தஸ்தைப் பெறும் வாய்ப்புள்ள நிறுவனங்களாக இவை அடையாளம் காணப்பட்டுள்ளன.


இதன்படி, இந்தியாவின் 51 நிறுவனங்களின் ஒட்டுமொத்த மதிப்பு ரூ.3.30 லட்சம் கோடியாக உள்ளது. இந்நிறுவனங்கள் இதுவரை ரூ.87,780 கோடி முதலீட்டைத் திரட்டியுள்ளன. மொத்தம் 60,228 பேருக்கு வேலைவாய்ப்பு வழங்கியுள்ளன. கடந்த 2024-25 நிதியாண்டில் இந்நிறுவனங்களின் வருவாய் ரூ.33,233 கோடியாக இருந்தது.

ஃபின்டெக் முதலிடம்

ஃபின்டெக் துறையைச் சேர்ந்த 13 நிறுவனங்கள் பட்டியலில் இடம்பெற்று முதலிடத்தில் உள்ளன. சாஸ் (SaaS), இ-காமர்ஸ் துறைகளில் தலா 5 நிறுவனங்களும், கல்வித் தொழில்நுட்பம் மற்றும் வேளாண் தொழில்நுட்பத் துறைகளில் தலா 4 நிறுவனங்களும் இடம்பெற்றுள்ளன.

செயற்கை நுண்ணறிவு, தூய்மையான எரிசக்தி, விண்வெளி மற்றும் பாதுகாப்புத் துறைகளைச் சேர்ந்த 8 நிறுவனங்களும் இந்தப் பட்டியலில் உள்ளன.நகரங்கள் அடிப்படையில் பெங்களூரு 17 நிறுவனங்களுடன் முதலிடத்தில் உள்ளது. டெல்லியில் 11 நிறுவனங்களும், மும்பையில் 8 நிறுவனங்களும் உள்ளன. அடுத்ததாக, சென்னையைச் சேர்ந்த 2 நிறுவனங்கள் பட்டியலில் இடம்பெற்றுள்ளன.

7 நிறுவனங்கள் உயர்வு

கடந்த ஆண்டு பட்டியலில் இடம்பெற்றிருந்த 7 நிறுவனங்கள், 2026-ல் 1 பில்லியன் டாலர் மதிப்பீட்டைக் கடந்து யூனிகார்ன் அந்தஸ்தைப் பெற்றுள்ளன. இதன் மூலம் 2021 முதல் இதுவரை இந்தப் பட்டியலில் இருந்து யூனிகார்ன்களாக உயர்ந்த நிறுவனங்களின் எண்ணிக்கை 34 ஆக அதிகரித்துள்ளது. 

டிவின் ஹெல்த், கிரெடிட்பீ, கிளவுட்நைன் ஹாஸ்பிட்டல்ஸ், தன், லா ரெனன், நியோ வெல்த் மேனேஜ்மென்ட் , இன் வீடியோ ஏஐ ஆகியவை புதிதாக இந்த அந்தஸ்தைப் பெற்றுள்ளன.மேலும், சென்னையைச் சேர்ந்த அக்னிகுல் உள்ளிட்ட 15 நிறுவனங்கள் இந்த ஆண்டு புதிதாகப் பட்டியலில் இணைந்துள்ளன..


யூனிகார்ன் அந்தஸ்து வாய்ப்புள்ள நிறுவனங்கள்
நாடு எண்ணிக்கை

அமெரிக்கா 302
சீனா 278
இந்தியா 51

51 இந்திய ஸ்டார்ட்அப்கள்

மொத்த மதிப்பு ரூ.3.3 லட்சம் கோடி
திரட்டிய முதலீடு ரூ.87,780 கோடி
மொத்த வேலைவாய்ப்பு 60,228

ஆதாரம் : The 2026 ASK Private Wealth Hurun India Gazelle Index

முந்தைய செய்தி
மாணிக்கம் தாகூருக்கு எதிரான தேர்தல் வழக்கு வாபஸ்
அடுத்த செய்தி
வாகனக் காப்பீட்டில் 4 அடுக்கு முறை; டிசம்பர் 15 முதல் அமல்

தொடர்புடைய செய்திகள்