Search

Saved articles

You have not yet added any article to your bookmarks!

Browse articles

GDPR Compliance

We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

மாணிக்கம் தாகூருக்கு எதிரான தேர்தல் வழக்கு வாபஸ்

மாணிக்கம் தாகூருக்கு எதிரான தேர்தல் வழக்கு வாபஸ்

தேர்தல் வழக்கை, தேமுதிக வேட்பாளர் விஜய பிரபாகரன் வாபஸ் பெற்றுள்ளார்.

பகிரவும் WhatsApp Facebook

விருதுநகர் தொகுதி காங்கிரஸ் எம்.பி. மாணிக்கம் தாகூர் வெற்றியை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த தேர்தல் வழக்கை, தேமுதிக வேட்பாளர் விஜய பிரபாகரன் வாபஸ் பெற்றுள்ளார்.

கடந்த 2024-ல் நடந்த மக்களை தேர்தலில், விருதுநகர் தொகுதியில், காங்கிரஸ் வேட்பாளராக போட்டியிட்ட மாணிக்கம் தாகூர், 4,379 ஓட்டுகள் வித்தியாசத்தில் வென்றார். இவரது வெற்றியை எதிர்த்து, தேமுதிக சார்பில் போட்டியிட்ட விஜய பிரபாகரன், சென்னை உயர் நீதிமன்றத்தில் தேர்தல் வழக்கு தொடர்ந்திருந்தார்.


மனுவில், மாணிக்கம் தாகூர் தாக்கல் செய்திருந்த வேட்பு மனுவில் சொத்துகள், குற்றவியல் வழக்குகள் குறித்த முழு விபரங்களை மறைத்துள்ளார். தேர்தலில் பல்வேறு முறைகேடுகளில் ஈடுபட்டு வெற்றி பெற்றார் உள்ளிட்ட குற்றச்சாட்டுகள்' கூறப்பட்டிருந்தன.

 
இந்த நிலையில், தேர்தல் வழக்கை திரும்ப பெற அனுமதி கோரி விஜய பிரபாகரன் தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை ஏற்றுக்கொண்ட, நீதிபதி என்.சதீஷ்குமார், மனுவை வாபஸ் பெற அனுமதித்து, வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

முந்தைய செய்தி
நாகை - இலங்கை கப்பல் பயணக் கட்டணம் குறைப்பு
அடுத்த செய்தி
புதிய யூனிகார்ன் அந்தஸ்து ஸ்டார்ட்அப் - பிரிட்டனை முந்தியது இந்தியா

தொடர்புடைய செய்திகள்