Search

Saved articles

You have not yet added any article to your bookmarks!

Browse articles

GDPR Compliance

We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

இந்தியன் ஆயில், யூனியன் வங்கி பங்குகளுக்கு குறுகிய கால ‘வாங்கும்’ பரிந்துரை

இந்தியன் ஆயில், யூனியன் வங்கி பங்குகளுக்கு குறுகிய கால ‘வாங்கும்’ பரிந்துரை

தினசரி முடிவு விலை அடிப்படையில் ரூ.137 இழப்புத் தடுப்பு அளவாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

பகிரவும் WhatsApp Facebook

இந்தியப் பங்குச் சந்தையில் மீண்டும் வாங்கும் ஆர்வம் அதிகரித்துள்ள நிலையில், இந்தியன் ஆயில், யூனியன் வங்கி பங்குகளை குறுகிய கால முதலீட்டுக்குத் தரகு நிறுவனங்கள் பரிந்துரைத்துள்ளன. இந்தியன் ஆயில் பங்குக்கு ரூ.160, யூனியன் வங்கி பங்குக்கு ரூ.205–208 என இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இந்தியன் ஆயில் பங்கு நீண்ட காலமாக ஒரே விலை வரம்புக்குள் வர்த்தகமாகி வந்தது. அந்த வரம்பைக் கடந்து பங்கு உயர்ந்தபோது, வர்த்தக அளவும் அதிகரித்தது. இது வாங்கும் ஆர்வம் வலுப்பட்டதைக் காட்டுவதாக எஸ்எம்ஐஎஃப்எஸ் தெரிவித்துள்ளது. பரிந்துரையின்போது ரூ.144.50-ஆக இருந்த பங்கு, அடுத்த சில வாரங்களில் ரூ.160-ஐ எட்ட வாய்ப்புள்ளதாகக் கணித்துள்ளது. தினசரி முடிவு விலை அடிப்படையில் ரூ.137 இழப்புத் தடுப்பு அளவாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.


யூனியன் வங்கி பங்கு ரூ.164–166 பகுதியில் வாங்கும் ஆதரவைப் பெற்று, படிப்படியாக மீண்டுள்ளது. அதன் தினசரி குறைந்தபட்ச விலை படிப்படியாக உயர்வதுடன், நீண்டகால நகரும் சராசரிக்கும் மேலே பங்கு வர்த்தகமாகிறது. ரூ.186–187 பகுதியில் விலை எதிர்ப்பைச் சந்திக்கிறது.

 ரூ.187–190 வரம்பை உறுதியாகக் கடந்தால், முதலில் ரூ.200-ஐ எட்ட வாய்ப்புள்ளதாகக் கணிக்கப்பட்டுள்ளது. உடனடி ஆதரவு ரூ.178–180 பகுதியிலும், அடுத்த ஆதரவு ரூ.170–172 பகுதியிலும் இருப்பதாகத் தொழில்நுட்பப் பகுப்பாய்வு சுட்டிக்காட்டுகிறது.


ரூ.180–185 விலை வரம்பில் யூனியன் வங்கி பங்கைப் படிப்படியாக வாங்கலாம் எனப் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. இதற்கு ரூ.205–208 இலக்காகவும், ரூ.170-க்குக் கீழே இழப்புத் தடுப்பு அளவாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

முந்தைய செய்தி
கச்சா எண்ணெய் விலை சரிவு - 25,000 புள்ளிகளை கடந்த நிஃப்டி
அடுத்த செய்தி
பிரதான பங்குச் சந்தைகளுக்கு மாறிய பிரைட் அவுட்டோர் மீடியா

தொடர்புடைய செய்திகள்