Search

Saved articles

You have not yet added any article to your bookmarks!

Browse articles

GDPR Compliance

We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

கச்சா எண்ணெய் விலை சரிவு - 25,000 புள்ளிகளை கடந்த நிஃப்டி

கச்சா எண்ணெய் விலை சரிவு - 25,000 புள்ளிகளை கடந்த நிஃப்டி

பங்குச் சந்தையின் நிஃப்டி 58.25 புள்ளிகள் (0.23 சதவீதம்) உயர்ந்து 25,044.65 புள்ளிகளில் முடிந்தது.

பகிரவும் WhatsApp Facebook

கச்சா எண்ணெய் விலை குறைந்ததாலும், வங்கி மற்றும் நிதி நிறுவனப் பங்குகளுக்கு வாங்குதல் அதிகரித்ததாலும் இந்தியப் பங்குச் சந்தைகள் நேற்று உயர்வுடன் முடிந்தன. சென்செக்ஸ் 107.25 புள்ளிகள் உயர்ந்தது. நிஃப்டி மீண்டும் 25,000 புள்ளிகளைக் கடந்தது.

மும்பை பங்குச் சந்தையின் சென்செக்ஸ் 0.13 சதவீதம் உயர்ந்து 81,106.65 புள்ளிகளில் நிறைவடைந்தது. வர்த்தகத்தின் இடையே அது 340.01 புள்ளிகள் உயர்ந்து 81,339.41 புள்ளிகளைத் தொட்டது. தேசிய பங்குச் சந்தையின் நிஃப்டி 58.25 புள்ளிகள் (0.23 சதவீதம்) உயர்ந்து 25,044.65 புள்ளிகளில் முடிந்தது.


சென்செக்ஸ் பங்குகளில் பாரத ஸ்டேட் வங்கி, டிரென்ட், லார்சன் அண்ட் டூப்ரோ, என்டிபிசி, எச்டிஎஃப்சி வங்கி, ஐசிஐசிஐ வங்கி ஆகியவை குறிப்பிடத்தக்க அளவில் உயர்ந்தன. எச்சிஎல் டெக், டாடா ஸ்டீல், அல்ட்ராடெக் சிமென்ட், பஜாஜ் ஃபைனான்ஸ் ஆகியவை சரிந்தன.


மும்பை பங்குச் சந்தையின் பொதுத்துறை வங்கிக் குறியீடு 3.76 சதவீதம் உயர்ந்தது. வங்கிக் குறியீடு 1.41 சதவீதமும், சுகாதாரக் குறியீடு 1.10 சதவீதமும், நிதிச் சேவைகள் குறியீடு 0.73 சதவீதமும் உயர்ந்தன. மிட்கேப் செலக்ட் குறியீடு 0.34 சதவீதமும், ஸ்மால்கேப் செலக்ட் குறியீடு 0.07 சதவீதமும் உயர்ந்தன. தொலைத்தொடர்பு, தகவல் தொழில்நுட்பம், உலோகம், நுகர்பொருள் துறைக் குறியீடுகள் சரிந்தன.


சர்வதேச சந்தையில் பிரெண்ட் கச்சா எண்ணெய் விலை 1.04 சதவீதம் குறைந்து பீப்பாய்க்கு 97.46 டாலராக இருந்தது. சமீபத்தைய ஏற்றத்தைத் தொடர்ந்து முதலீட்டாளர்கள் லாபத்தைப் பதிவு செய்ததாலும், தகவல் தொழில்நுட்பம் மற்றும் உலோகப் பங்குகள் சரிந்ததாலும் சந்தையின் உயர்வு குறைந்த்தாக ஜியோஜித் இன்வெஸ்ட்மென்ட்ஸ் ஆய்வுப் பிரிவுத் தலைவர் வினோத் நாயர் தெரிவித்தார். வெளிநாட்டு நிறுவன முதலீட்டாளர்களின் பங்களிப்பு அதிகரித்ததும், நிறுவனங்களின் காலாண்டு முடிவுகள் எதிர்பார்ப்பை விஞ்சியதும் சந்தைக்கு ஆதரவளித்ததாக அவர் கூறினார்.


கடந்த வாரம் சென்செக்ஸ் 6,568.49 புள்ளிகள் (8.82 சதவீதம்), நிஃப்டி 1,977.25 புள்ளிகள் (8.57 சதவீதம்) உயர்ந்தன. தொடர்ந்து ஏழு வர்த்தக அமர்வுகளில் ஏற்றம் கண்ட சந்தை, ஞாயிற்றுக்கிழமை நடந்த தீபாவளி முகூர்த்த வர்த்தகத்தில் சற்றுச் சரிந்தது. அந்த அமர்வில் சென்செக்ஸ் 80,999.40 புள்ளிகளிலும், நிஃப்டி 24,986.40 புள்ளிகளிலும் முடிந்தன.


ஆசிய சந்தைகளில் ஜப்பானின் நிக்கேய், ஷாங்காய் கூட்டு குறியீடுகள் உயர்ந்தன. தென் கொரியாவின் கோஸ்பி, ஹாங்காங்கின் ஹாங் செங் குறியீடுகள் சரிந்தன. ஐரோப்பிய சந்தைகள் இடைநேர வர்த்தகத்தில் உயர்வுடன் இருந்தன. அமெரிக்கப் பங்குச் சந்தைகள் வெள்ளிக்கிழமை பெரும்பாலும் உயர்வுடன் முடிந்தன.

முந்தைய செய்தி
பங்குச் சந்தைகளுக்கு விடுமுறை - முழு நிலவரம்
அடுத்த செய்தி
இந்தியன் ஆயில், யூனியன் வங்கி பங்குகளுக்கு குறுகிய கால ‘வாங்கும்’ பரிந்துரை

தொடர்புடைய செய்திகள்