Search

Saved articles

You have not yet added any article to your bookmarks!

Browse articles

GDPR Compliance

We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

ஓர்க்லா நிறுவனத்தின் நிகர லாபம் 19.2% உயர்வு

ஓர்க்லா நிறுவனத்தின் நிகர லாபம் 19.2% உயர்வு

வருவாய் 19.35 சதவீதம் அதிகரித்து, ரூ.776.16 கோடியாக உயர்ந்துள்ளது.

பகிரவும் WhatsApp Facebook

ஓர்க்லா இந்தியா நிறுவன நடப்பு நிதியாண்டின் 2-ம் காலாண்டு நிகர லாபம் 19.22 சதவீதம் உயர்ந்து ரூ.91.42 கோடியாக அதிகரித்துள்ளது.

கடந்த ஆண்டு இதே காலாண்டில் நிறுவன நிகர லாபம் ரூ.76.68 கோடியாக இருந்தது. செயல்பாடுகள் மூலம் கிடைத்த வருவாய் 19.35 சதவீதம் அதிகரித்து, ரூ.776.16 கோடியாக உயர்ந்துள்ளது. 


கடந்த ஆண்டு இதே காலகட்டத்தில் இது ரூ.650.28 கோடியாக இருந்தது. பொருட்கள் விற்பனை வருவாய் 18.4 சதவீதமும், விற்பனை அளவு 2.9 சதவீதமும் வளர்ச்சி கண்டுள்ளன.
இரண்டாம் காலாண்டில் நிறுவனத்தின் மொத்த செலவு 19.04 சதவீதம் உயர்ந்து ரூ.664.59 கோடியாகவும், மொத்த வருவாய் 19.12 சதவீதம் அதிகரித்து ரூ.787 கோடியாகவும் இருந்தது.


நடப்பு நிதியாண்டின் முதல் அரையாண்டில் நிறுவனத்தின் ஒருங்கிணைந்த மொத்த வருவாய் 15.6 சதவீதம் உயர்ந்து ரூ.1,463.53 கோடியாக உள்ளது.


இதுகுறித்து நிறுவன நிர்வாக இயக்குநரும், தலைமை செயல் அதிகாரியுமான சஞ்சய் சர்மா கூறும்போது, "பண்டிகைக்கால விற்பனை 3-ம் காலாண்டிலும் தொடரும். நிறுவனத்தின் வணிக முத்திரைகளின் வலிமை மற்றும் புதிய சந்தைகளில் விரிவாக்கம் ஆகியவை வளர்ச்சிக்கு உதவும்" என்றார்.


இதற்கிடையே, நார்வே நாட்டைச் சேர்ந்த ஓர்க்லா குழுமத்தின் ஓர் அங்கமான ஓர்க்லா இந்தியா நிறுவனத்தின் பங்குகள் நேற்று மும்பை பங்குச் சந்தையில் 8.3 சதவீதம் உயர்ந்து, ரூ.573.50-க்கு விற்பனையானது.

முந்தைய செய்தி
சென்செக்ஸ் 2,009 புள்ளிகள் உயர்வு - 6-வது நாளாக ஏற்றம்
அடுத்த செய்தி
‘EvoS’ நிறுவனத்தை ரூ.26,000 கோடிக்கு கைப்பற்றும் Adani Ports

தொடர்புடைய செய்திகள்