Search

Saved articles

You have not yet added any article to your bookmarks!

Browse articles

GDPR Compliance

We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

சென்செக்ஸ் 2,009 புள்ளிகள் உயர்வு - 6-வது நாளாக ஏற்றம்

சென்செக்ஸ் 2,009 புள்ளிகள் உயர்வு -  6-வது நாளாக ஏற்றம்

பங்குச் சந்தையின் நிஃப்டி 576 புள்ளிகள் (2.40 சதவீதம்) உயர்ந்து 24,536.60-ல் நிறைவடைந்து, மூன்று மாத உச்சத்தை எட்டியது.

பகிரவும் WhatsApp Facebook

இந்தியப் பங்குச் சந்தைகள் நேற்று தொடர்ந்து 6-வது நாளாக உயர்ந்தன. மும்பை பங்குச் சந்தையின் சென்செக்ஸ் 2,008.61 புள்ளிகள் (2.60 சதவீதம்) உயர்ந்து 79,310.01-ல் முடிந்தது. தேசிய பங்குச் சந்தையின் நிஃப்டி 576 புள்ளிகள் (2.40 சதவீதம்) உயர்ந்து 24,536.60-ல் நிறைவடைந்து, மூன்று மாத உச்சத்தை எட்டியது.

அமெரிக்க இடைத் தேர்தலில் நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் ஜனநாயகக் கட்சி பெரும்பான்மை பெற்றதைத் தொடர்ந்து, மேற்காசிய மோதல் தணியலாம் என்ற எதிர்பார்ப்பு எழுந்தது. இதையடுத்து, கச்சா எண்ணெய் விலை நேற்று முன்தினம் இரவு சரிந்தது.


அமெரிக்கப் பங்குச் சந்தைகளின் ஏற்றமும், வெளிநாட்டு நிறுவன முதலீட்டாளர்கள் தொடர்ந்து பங்குகளை வாங்கியதும் இந்தியச் சந்தைகளுக்கு ஆதரவளித்தன.
வர்த்தகத்தின் இடையே சென்செக்ஸ் 2,168.63 புள்ளிகள் (2.80 சதவீதம்) உயர்ந்து 79,470.03 வரை சென்றது. கடந்த ஆறு அமர்வுகளில் சென்செக்ஸ் மொத்தம் 6,063.98 புள்ளிகள் (8.27 சதவீதம்), நிஃப்டி 1,837.75 புள்ளிகள் (8 சதவீதம்) உயர்ந்தன. புதன்கிழமை சென்செக்ஸ் 77,301.40-லும், நிஃப்டி 23,960.60-லும் முடிந்திருந்தன.

சென்செக்ஸ் பங்குகளில் பஜாஜ் ஃபைனான்ஸ் 7.77 சதவீதம் உயர்ந்து முன்னிலை வகித்தது. இன்டர்குளோப் ஏவியேஷன் 5.80 சதவீதம், ஐசிஐசிஐ வங்கி 5.29 சதவீதம், மாருதி 5.28 சதவீதம், மகிந்திரா அண்ட் மகிந்திரா 5.15 சதவீதம், பஜாஜ் ஃபின்சர்வ் 4.66 சதவீதம் உயர்ந்தன. என்டிபிசி, பாரத் எலக்ட்ரானிக்ஸ், அதானி போர்ட்ஸ், ஐடிசி பங்குகள் சரிந்தன.


மும்பை பங்குச் சந்தையில் 2,994 பங்குகள் உயர்ந்தன. 1,453 பங்குகள் சரிந்தன. 200 பங்குகளின் விலை மாறவில்லை. மிட்கேப் செலக்ட் குறியீடு 1.79 சதவீதமும், ஸ்மால்கேப் செலக்ட் குறியீடு 0.22 சதவீதமும் உயர்ந்தன. துறைவாரியாக வாகனக் குறியீடு 4.13 சதவீதம், நிதிச் சேவைகள் 3.77 சதவீதம், தனியார் வங்கிகள் 3.64 சதவீதம், ரியல் எஸ்டேட் 3.37 சதவீதம், பொதுத்துறை வங்கிகள் 3.15 சதவீதம் உயர்ந்தன. மூலதனப் பொருள்கள், மின்சாரம், தொலைத்தொடர்புத் துறைக் குறியீடுகள் சரிந்தன.


பிரென்ட் கச்சா எண்ணெய் நேற்று முன்தினம் இரவில் குறைந்த விலையிலிருந்து நேற்று மீண்டது. அது 1.59 சதவீதம் உயர்ந்து பீப்பாய்க்கு 96.12 அமெரிக்க டாலராக வர்த்தகமானது. இருப்பினும், கடந்த வாரத்தைவிட விலை குறைவாகவே இருந்ததாக ஹெச்எஸ்டி வெல்த் நிறுவனர் ஹரிசெல்வன் ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.


அமெரிக்கக் கடன் பத்திர வருவாய் விகிதமும் டாலரும் சரிந்தது இந்தியாவின் பணவீக்கம் குறித்த கவலையைத் தணித்ததாக ஜியோஜித் இன்வெஸ்ட்மென்ட்ஸ் ஆய்வுப் பிரிவு தலைவர் வினோத் நாயர் கூறினார். இரண்டாம் காலாண்டில் நிறுவனங்கள் வெளியிட்ட சாதகமான நிதி முடிவுகளும் சந்தை ஏற்றத்துக்கு ஆதரவளித்ததாக அவர் தெரிவித்தார்.


ஆசியாவில் தென் கொரியாவின் கோஸ்பி, ஜப்பானின் நிக்கேய் குறியீடுகள் சரிந்தன. ஷாங்காய், ஹாங்காங் சந்தைகள் உயர்ந்தன. ஐரோப்பியச் சந்தைகள் ஏற்றத்தில் வர்த்தகமாகின. புதன்கிழமை அமெரிக்காவின் டவ் ஜோன்ஸ் 3.03 சதவீதம், எஸ் அண்ட் பி 500 குறியீடு 1.58 சதவீதம், நாஸ்டாக் 1.44 சதவீதம் உயர்ந்து முடிந்தன.

முந்தைய செய்தி
முதலீட்டாளர் பங்கு மதிப்பு ரூ.8 லட்சம் கோடி உயர்வு
அடுத்த செய்தி
ஓர்க்லா நிறுவனத்தின் நிகர லாபம் 19.2% உயர்வு

தொடர்புடைய செய்திகள்