Search

Saved articles

You have not yet added any article to your bookmarks!

Browse articles

GDPR Compliance

We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

மேக் மை ட்ரிப் இந்தியா ஐபிஓவுக்கு செபி ஒப்புதல்

மேக் மை ட்ரிப் இந்தியா ஐபிஓவுக்கு செபி ஒப்புதல்

பங்குதாரர்கள் தங்கள் பங்குகளில் ஒரு பகுதியை விற்கும் முறையில் (ஓஎஃப்எஸ்) இந்த வெளியீடு நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

பகிரவும் WhatsApp Facebook

பிராண்ட் அறிமுகத்தை விரிவுபடுத்தவும், தொழில்நுட்பத் திறனாளர்களை ஈர்க்கவும் இந்தியத் துணை நிறுவனத்தைப் பங்குச் சந்தையில் பட்டியலிட மேக் மை ட்ரிப் நிறுவனம் திட்டமிட்டுள்ளது.

இணையவழிப் பயண முன்பதிவுச் சேவைகளை வழங்கும் மேக்மை ட்ரிப் (இந்தியா) நிறுவனத்தின் ஆரம்பப் பொதுப் பங்கு வெளியீட்டுக்கு (ஐபிஓ) இந்தியப் பங்குச் சந்தை ஒழுங்குமுறை வாரியமான செபி ஒப்புதல் அளித்துள்ளது.


இந்த நிறுவனம் கடந்த ஜூலையில் ரகசிய முன்தாக்கல் முறையில் வரைவு ஆவணங்களைச் சமர்ப்பித்தது. அவற்றைப் பரிசீலித்த செபி, நவம்பர் 6-ம் தேதி தனது இறுதிக் கருத்துகளை வழங்கியதாக பிடிஐ செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. இதையடுத்து, ஐபிஓவுக்கான அடுத்தகட்டப் பணிகளை நிறுவனம் மேற்கொள்ளலாம்.
தற்போதுள்ள பங்குதாரர்கள் தங்கள் பங்குகளில் ஒரு பகுதியை விற்கும் முறையில் (ஓஎஃப்எஸ்) இந்த வெளியீடு நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

 அமெரிக்காவின் நாஸ்டாக் சந்தையில் பட்டியலிடப்பட்டுள்ள மேக்மைட்ரிப் நிறுவனமும், அதன் முழு உரிமையிலான சிங்கப்பூரைச் சேர்ந்த ஐபிபோ குரூப் ஹோல்டிங்ஸ் நிறுவனமும் பங்குகளை விற்க உள்ளன. இந்த முறையில் விற்பனை மூலம் கிடைக்கும் தொகை, பங்குகளை விற்கும் நிறுவனங்களுக்குச் செல்லும்.


இந்தியப் பங்குச் சந்தையில் தனியாகப் பட்டியலிடப்பட்ட பிறகும், மேக்மைட்ரிப் குழுமத்தின் துணை நிறுவனமாகவே இந்திய நிறுவனம் தொடரும் என்று தாய் நிறுவனம் நாஸ்டாக் சந்தைக்குச் சமர்ப்பித்த ஆவணத்தில் தெரிவித்துள்ளது. இந்திய நிறுவனத்தின் வருவாய் உள்ளிட்ட நிதி முடிவுகளும் தொடர்ந்து குழுமத்தின் ஒருங்கிணைந்த நிதி முடிவுகளில் இடம்பெறும்.


இந்தியச் சந்தையில் மேக் மை ட்ரிப் பிராண்டின் அறிமுகத்தை விரிவுபடுத்த இந்தப் பட்டியலிடல் உதவும் எனத் தாய் நிறுவனம் எதிர்பார்க்கிறது. தொழில்நுட்பத் துறையில் திறமையான பணியாளர்களை ஈர்ப்பதில் போட்டி நிலவும் சூழலில், அவர்களுக்கு ஊக்கத்தொகை வழங்கவும், பணியில் முன்னேற்ற வாய்ப்புகளை ஏற்படுத்தவும் இந்த நடவடிக்கை உதவும் என்று நிறுவனம் தெரிவித்துள்ளது.


வெளியீட்டின் அளவு, விலை வரம்பு, விண்ணப்பத் தொடக்க நாள் மற்றும் பங்குகள் பட்டியலிடப்படும் தேதி ஆகிய விவரங்கள் இன்னும் அறிவிக்கப்படவில்லை. பங்கு விற்பனைக்குப் பிறகு இந்திய நிறுவனத்தில் தாய் நிறுவனம் வைத்திருக்கும் பங்கு விகிதம் குறித்த விவரமும் இதுவரை வெளியாகவில்லை.

முந்தைய செய்தி
தீபாவளி வசூலில் ‘ராமாயணா’ சாதனை
அடுத்த செய்தி
1,364 புற்றுநோய் மருந்துகளின் விலை குறைப்பு அமல்

தொடர்புடைய செய்திகள்