Search

Saved articles

You have not yet added any article to your bookmarks!

Browse articles

GDPR Compliance

We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

1,364 புற்றுநோய் மருந்துகளின் விலை குறைப்பு அமல்

1,364 புற்றுநோய் மருந்துகளின் விலை குறைப்பு அமல்

புற்றுநோய் மருந்துகளுக்கான வர்த்தக லாப வரம்பு 30 சதவீதமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

பகிரவும் WhatsApp Facebook

புற்றுநோய் சிகிச்சைக்காகப் பயன்படுத்தப்படும் மருந்துகளின் விலையைக் குறைக்கும் நடவடிக்கை அமலுக்கு வந்துள்ளது. இதன்படி, 1,364 வகையான புற்றுநோய் மருந்துகளின் அதிகபட்ச சில்லறை விலை (MRP) திருத்தி அமைக்கப்பட்டுள்ளது.

இந்த விலை மாற்றம், மருந்துகளின் விற்பனைச் சங்கிலியில் உள்ள வர்த்தக லாப வரம்பைக் கட்டுப்படுத்தும் வகையில் தேசிய மருந்து விலை நிர்ணய ஆணையத்தால் (NPPA) மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதன்படி, 137 வகையான புற்றுநோய் மருந்துகளுக்கான வர்த்தக லாப வரம்பு 30 சதவீதமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.


நவம்பர் 8-ம் தேதி நிலவரப்படி 85 மருந்து நிறுவனங்கள் 121 வகையான மருந்துகளின் கீழ் 1,364 மருந்து தயாரிப்புகளுக்கான திருத்தப்பட்ட விலையை அறிவித்துள்ளன. இதில் 679 பிராண்டுகளின் விலை 50 சதவீதத்துக்கும் அதிகமாகக் குறைக்கப்பட்டுள்ளது. அதிகபட்சமாக சில மருந்தின் விலை 96.45 சதவீதம் வரை குறைந்துள்ளது.


இந்த விலை குறைப்பின் மூலம் பொதுமக்கள் ஆண்டுக்கு ரூ.3,540.38 கோடி வரை சேமிக்க முடியும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.
மருந்துகளின் புதிய விலையை 'பார்மா சாஹி தாம்' (Pharma Sahi Daam) செயலி மற்றும் NPPA இணையதளம் மூலம் சரிபார்க்கலாம். கூடுதல் விலை வசூலித்தால் 1800-111-255 என்ற உதவி எண்ணில் புகார் அளிக்கலாம் என்றும் மத்திய அரசு தெரிவித்துள்ளது.

முந்தைய செய்தி
மேக் மை ட்ரிப் இந்தியா ஐபிஓவுக்கு செபி ஒப்புதல்
அடுத்த செய்தி
பட்டாசுகளால் 4.5% அதிகரித்த காற்று மாசு - சென்னைதான் டாப்!

தொடர்புடைய செய்திகள்