Search

Saved articles

You have not yet added any article to your bookmarks!

Browse articles

GDPR Compliance

We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

பட்டாசுகளால் 4.5% அதிகரித்த காற்று மாசு - சென்னைதான் டாப்!

பட்டாசுகளால் 4.5% அதிகரித்த காற்று மாசு - சென்னைதான் டாப்!

மாநிலம் முழுவதும் 39 இடங்களில் காற்றுத் தரமும், 34 இடங்களில் ஒலி மாசும் அளவிடப்பட்டன.

பகிரவும் WhatsApp Facebook

தீபாவளி பண்டிகையின்போது தமிழகத்தில் கடந்த ஆண்டைவிட காற்று மாசு 4.50 சதவீதமும், ஒலி மாசு 1.36 சதவீதமும் அதிகரித்துள்ளதாக தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியத்தின் ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உச்ச நீதிமன்ற அறிவுறுத்தலின்படி, குறிப்பிட்ட நேரத்தில் மட்டுமே பசுமைப் பட்டாசுகள் வெடிக்க வேண்டும் என மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் சார்பில் மாநிலம் முழுவதும் தீவிர விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. மேலும், மாநிலம் முழுவதும் 39 இடங்களில் காற்றுத் தரமும், 34 இடங்களில் ஒலி மாசும் அளவிடப்பட்டன. 


இந்த ஆய்வின் முடிவுகளின்படி, காற்றின் தரம் 2025-ல் 161.69-ஆக இருந்த மாநில சராசரி காற்றுத் தரக் குறியீடு, இந்த ஆண்டு 168.97-ஆக உயர்ந்துள்ளது.
சென்னையில் அதிகபட்சமாக வளசரவாக்கம் (343), நுங்கம்பாக்கம் (332), சவுகார்பேட்டை (311), தி.நகர் (306) ஆகிய பகுதிகளில் காற்றுத் தரம் 'மிகவும் மோசம்' என்ற ஆபத்தான பிரிவில் பதிவாகியுள்ளது. 

சென்னையில் குறைந்தபட்சமாக திருவொற்றியூரில் 183 என்ற அளவில் மிதமான மாசு பதிவாகியுள்ளது.
பட்டாசுகளால் ஏற்படும் சராசரி ஒலி மாசு அளவும் 2025-ல் 75.70 டெசிபலாக இருந்த நிலையில், இந்த ஆண்டு 76.73 டெசிபலாக அதிகரித்துள்ளது. 

சென்னையைப் பொறுத்தவரை வளசரவாக்கத்தில் அதிகபட்சமாக 88.6 டெசிபலும், திருவொற்றியூரில் குறைந்தபட்சமாக 77.4 டெசிபலும் ஒலி மாசு பதிவாகியுள்ளது. பட்டாசு வெடிப்பது மட்டுமின்றி, காற்றின் வேகம், திசை உள்ளிட்ட வானிலை மாறுபாடுகளும் இந்த மாசு அதிகரிப்புக்கு முக்கியக் காரணம் என வாரியம் தெரிவித்துள்ளது.

முந்தைய செய்தி
1,364 புற்றுநோய் மருந்துகளின் விலை குறைப்பு அமல்
அடுத்த செய்தி
இந்திய பங்குகளுக்கு அதிக முக்கியத்துவம் - சீன சந்தையின் பரிந்துரை குறைப்பு

தொடர்புடைய செய்திகள்