Search

Saved articles

You have not yet added any article to your bookmarks!

Browse articles

GDPR Compliance

We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

StockGro லாபம் 3 மடங்கு உயர்வு - ரூ.2,000–2,500 கோடி திரட்டத் திட்டம்

StockGro லாபம் 3 மடங்கு உயர்வு - ரூ.2,000–2,500 கோடி திரட்டத் திட்டம்

நிகர லாபத்தில் ரூ.15.94 கோடி ஒத்திவைக்கப்பட்ட வரிச் சலுகையும் அடங்கும்.

பகிரவும் WhatsApp Facebook

பெங்களூருவைச் சேர்ந்த முதலீட்டு ஆய்வு, ஆலோசனைத் தளமான ஸ்டாக்ரோவின் நிகர லாபம், 2025–26 நிதியாண்டில் மூன்று மடங்குக்கும் அதிகமாக உயர்ந்து ரூ.112.96 கோடியை எட்டியுள்ளது. முந்தைய நிதியாண்டில் இது ரூ.34.64 கோடியாக இருந்தது.

நிறுவனத்தின் செயல்பாட்டு வருவாய் ரூ.113.33 கோடியிலிருந்து ரூ.226.14 கோடியாக அதிகரித்துள்ளது. இதில் சந்தாக் கட்டணங்கள் மூலம் மட்டும் ரூ.225.94 கோடி கிடைத்துள்ளது. மொத்தச் செலவுகள் 47.2 சதவீதம் உயர்ந்து ரூ.131.97 கோடியாகியுள்ளன.


செயல்பாடுகள் மூலம் கிடைத்த நிகரப் பணப்புழக்கம் ரூ.73.64 கோடியிலிருந்து ரூ.178.43 கோடியாக உயர்ந்துள்ளது. நிகர லாபத்தில் ரூ.15.94 கோடி ஒத்திவைக்கப்பட்ட வரிச் சலுகையும் அடங்கும்.


ஸ்டாக்ரோவை இயக்கும் அசெட்க்ரோ ஃபின்டெக், பொதுப் பங்கு வெளியீட்டுக்காக செபியிடம் ரகசிய வழிமுறையில் பூர்வாங்க ஆவணங்களைச் சமர்ப்பித்துள்ளது. இதன்மூலம் ரூ.2,000–2,500 கோடி திரட்டத் திட்டமிட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.


செயற்கை நுண்ணறிவுக் கருவிகள், முதலீட்டு ஆய்வுச் சேவைகளை வழங்கும் இத்தளம், 3.5 கோடிக்கும் அதிகமான பயனர்களைக் கொண்டுள்ளதாகக் கூறுகிறது. மேலும், செபியில் பதிவுசெய்த 150-க்கும் மேற்பட்ட ஆய்வாளர்களின் சேவைகளையும் வழங்குகிறது. சந்தா வருவாயே நிறுவனத்தின் வளர்ச்சிக்கு முக்கிய ஆதாரமாக உள்ளது.

முந்தைய செய்தி
அமர ராஜா பங்குக்கு ரூ.4.30 ஈவுத்தொகை
அடுத்த செய்தி
தங்கம் வாங்க போட்டிபோடும் நாடுகள் - 3 மாதங்களில் 321 டன் கொள்முதல்

தொடர்புடைய செய்திகள்