Search

Saved articles

You have not yet added any article to your bookmarks!

Browse articles

GDPR Compliance

We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

தங்கம் வாங்க போட்டிபோடும் நாடுகள் - 3 மாதங்களில் 321 டன் கொள்முதல்

தங்கம் வாங்க போட்டிபோடும் நாடுகள் - 3 மாதங்களில் 321 டன் கொள்முதல்

முதல் ஒன்பது மாதங்களில் மத்திய வங்கிகள் மொத்தம் 675 டன் தங்கத்தை வாங்கியுள்ளன.

பகிரவும் WhatsApp Facebook

உலக நாடுகளின் மத்திய வங்கிகள் தங்கம் வாங்கும் வேகம் 2024-ம் ஆண்டின் இறுதிக்குப் பிறகு அதிகபட்ச அளவை எட்டியுள்ளது. நடப்பாண்டின் மூன்றாவது காலாண்டில் மட்டும் 321 டன் தங்கத்தை மத்திய வங்கிகள் வாங்கியுள்ளதாக உலக தங்க கவுன்சில் (WGC) தெரிவித்துள்ளது.

இதுகுறித்து அந்த அமைப்பு நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:
நடப்பாண்டின் முதல் ஒன்பது மாதங்களில் மத்திய வங்கிகள் மொத்தம் 675 டன் தங்கத்தை வாங்கியுள்ளன. இது கடந்த ஆண்டின் இதே காலகட்டத்தைவிட சற்று அதிகமாகும்.


மூன்றாவது காலாண்டில் சீன மத்திய வங்கி 63 டன்னும், போலந்து மத்திய வங்கி 41 டன்னும் தங்கம் வாங்கியுள்ளன. அதேநேரத்தில், ரஷ்யா 19 டன் தங்கத்தை விற்பனை செய்துள்ளது.
ஈரான் போர் காரணமாக கச்சா எண்ணெய் விலை உயர்ந்ததுடன், வட்டி விகிதங்கள் அதிகரிக்கும் என்ற எதிர்பார்ப்பும் வலுப்பெற்றுள்ளது. இதன் தாக்கத்தால், கடந்த பிப்ரவரி மாத இறுதியிலிருந்து சர்வதேச சந்தையில் தங்கத்தின் விலை சுமார் 25 சதவீதம் குறைந்துள்ளது. இந்த விலைச் சரிவைப் பயன்படுத்தி மத்திய வங்கிகள் தங்கக் கொள்முதலை அதிகரித்துள்ளன.


இதற்கிடையே, தங்கம் சார்ந்த பரிவர்த்தனை வர்த்தக நிதிகளின் (ETF) இருப்பு 211 டன் அதிகரித்து புதிய உச்சத்தை எட்டியுள்ளது.
மூன்றாவது காலாண்டில் தங்க நகைகளுக்கான தேவை 17 சதவீதம் குறைந்து 313 டன்னாகச் சரிந்துள்ளது. இது 2000-ம் ஆண்டுக்குப் பிறகான மிகக் குறைந்த மூன்றாவது காலாண்டு அளவாகும்.


அதேநேரத்தில், தங்கச் சுரங்க உற்பத்தி 3 சதவீதம் உயர்ந்து 1,071 டன்னாக அதிகரித்துள்ளது. பழைய தங்கத்தை மறுசுழற்சி செய்வது 8 சதவீதம் குறைந்து 314 டன்னாக உள்ளது.
தங்கக் கட்டிகள், நாணயங்களுக்கான உலகளாவிய தேவை 19 சதவீதம் சரிந்து 268 டன்னாக உள்ளது. இருப்பினும், சீனாவில் அவற்றின் கொள்முதல் 7 சதவீதம் அதிகரித்து 79 டன்னாக உயர்ந்துள்ளதாக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முந்தைய செய்தி
StockGro லாபம் 3 மடங்கு உயர்வு - ரூ.2,000–2,500 கோடி திரட்டத் திட்டம்
அடுத்த செய்தி
26,000 மகளிர் சுய உதவி குழுக்களுக்கு ரூ.3,000 கோடி நிதி

தொடர்புடைய செய்திகள்