Search

Saved articles

You have not yet added any article to your bookmarks!

Browse articles

GDPR Compliance

We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

பங்குச் சந்தையில் களமிறங்கும் யோகிஜி டிஜி நிறுவனம்

பங்குச் சந்தையில் களமிறங்கும் யோகிஜி டிஜி நிறுவனம்

தனியார் முதலீட்டாளர்களிடமிருந்து ரூ.39 கோடி நிதி திரட்டியுள்ளது.

பகிரவும் WhatsApp Facebook

உள்நாட்டு எஃகு பதப்படுத்தும் தொழில்நுட்பத் தீர்வுகளை வழங்கி வரும் யோகிஜி டிஜி நிறுவனம், தனது ஆரம்பப் பொதுப்பங்கு வெளியீட்டுக்கு (ஐபிஓ) முன்பாக தனியார் முதலீட்டாளர்களிடமிருந்து ரூ.39 கோடி நிதி திரட்டியுள்ளது.

 
பங்குச் சந்தையில் களமிறங்கத் தயாராகி வரும் யோகிஜி டிஜி நிறுவனம், 11 முதலீட்டாளர்களுக்கு தலா ரூ.216 விலையில் 18,05,555 பங்குகளை வழங்கி இந்த ஆரம்பகட்டப் பங்கு ஒதுக்கீட்டுத் தொகையைப் பெற்றுள்ளது. 


இதில் ஆர்பி4 ஃபைனான்ஸ், மேவீன் பார்ட்னர்ஸ் உள்ளிட்ட முக்கிய நிதி நிறுவனங்கள் முதலீடு செய்துள்ளன. இத்தொகை வரவிருக்கும் ஐபிஓ-வின் புதிய பங்குகள் வெளியீட்டு மதிப்பில் விதிமுறைகளின்படி ஈடுசெய்யப்படும் என அந்நிறுவனம் கூறியுள்ளது.
 
முன்னதாக, யோகிஜி டிஜி நிறுவனம் ரூ.270 கோடி மதிப்பிலான புதிய பங்குகள் மற்றும் 71.71 லட்சம் பங்குகளை விற்பனை செய்யும் சலுகை அடங்கிய வரைவு அறிக்கையை 'செபி' அமைப்பிடம் சமர்ப்பித்திருந்தது. 

இந்த வெளியீட்டின் மூலம் பெறப்படும் நிதியை நிறுவனத்தின் அன்றாட செயல்பாட்டு மூலதனத் தேவைகள், கடன்களைத் திருப்பிச் செலுத்துதல் மற்றும் பொதுவான நிறுவன வளர்ச்சிப் பணிகளுக்காகப் பயன்படுத்த நிர்வாகம் திட்டமிட்டுள்ளது.

முந்தைய செய்தி
Kodiakkarai fishermen against boats from other districts
அடுத்த செய்தி
நேந்திரன், செவ்வாழை கிலோ ரூ.70க்கு விற்பனை

தொடர்புடைய செய்திகள்