Search

Saved articles

You have not yet added any article to your bookmarks!

Browse articles

GDPR Compliance

We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

நேந்திரன், செவ்வாழை கிலோ ரூ.70க்கு விற்பனை

நேந்திரன், செவ்வாழை  கிலோ ரூ.70க்கு விற்பனை
கோவை காந்தி பார்க்கில் உள்ள வாழைக்காய் மண்டியில் விற்பனைக்காக குவிந்திருந்த வாழைத்தார்கள்.

மழை மற்றும் தீபாவளியை கொண்டாட தள்ளுவண்டி வியாபாரிகள் சொந்த ஊருக்கு செல்ல திட்டமிட்டிருப்பதால் வாழைத்தார் வரத்து சரிந்து இருந்ததாக கமிஷன் மண்டி வியாபாரி அருள் தெரிவித்தார்.

பகிரவும் WhatsApp Facebook

கோவை மாநகரில் காந்திபார்க் மற்றும் ரத்தினபுரியில் வாழைத்தார் மண்டிகள் உள்ளன. இந்த சந்தைகளுக்கு சிறுமுகை, மேட்டுப்பாளையம், ஈரோடு மாவட்டம் நம்பியூர், சத்தியமங்கலம், பண்ணாரி மற்றும் புதுக்கோட்டை ஆகிய பகுதிகளில் இருந்து வாழைத்தார்களை விவசாயிகள் விற்பனைக்கு கொண்டு வருகின்றனர்.

இந்நிலையில், காந்திபார்க் சந்தைக்கு நேற்று 5 ஆயிரம் வாழைத்தார்களும், ரத்தினபுரி சந்தைக்கு 4 ஆயிரம் வாழைத்தார்களும் விற்பனைக்கு வந்தன. இதில் செவ்வாழை கிலோ ரூ.70 க்கும், நேந்திரன் கிலோ ரூ.68 முதல் 70 வரையிலும், பூவன் கிலோ ரூ.65க்கும் விற்பனையானது. கற்பூரவள்ளி கிலோ ரூ.40 முதல் ரூ.65 வரையிலும், நாடன் பழம் கிலோ ரூ. 35 முதல் ரூ.45
வரையிலும், ரொபஸ்டா கிலோ ரூ. 50 முதல் ரூ. 55 வரை ஏல முறையில் விற்பனையானது.


இன்றைய மார்க்கெட்டில் 80 விவசாயிகளும் 50 வியாபாரிகள் மட்டுமே கலந்து கொண்டனர். மழை மற்றும் தீபாவளியை கொண்டாட தள்ளுவண்டி வியாபாரிகள் சொந்த ஊருக்கு செல்ல திட்டமிட்டிருப்பதால் வாழைத்தார் வரத்து சரிந்து இருந்ததாக கமிஷன் மண்டி வியாபாரி அருள் தெரிவித்தார்.

முந்தைய செய்தி
பங்குச் சந்தையில் களமிறங்கும் யோகிஜி டிஜி நிறுவனம்
அடுத்த செய்தி
Engineer’s air travel cancelled after GPS device found in baggage

தொடர்புடைய செய்திகள்