Search

Saved articles

You have not yet added any article to your bookmarks!

Browse articles

GDPR Compliance

We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

‘EvoS’ நிறுவனத்தை ரூ.26,000 கோடிக்கு கைப்பற்றும் Adani Ports

‘EvoS’ நிறுவனத்தை ரூ.26,000 கோடிக்கு கைப்பற்றும் Adani Ports

இந்த ஒப்பந்தத்தின் மொத்த நிறுவன மதிப்பு சுமார் 2.56 பில்லியன் யூரோவாகும். அதாவது 2.88 பில்லியன் அமெரிக்க டாலர் (ரூ.26,434 கோடி) என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

பகிரவும் WhatsApp Facebook

ஐரோப்பாவின் முன்னணி திரவ எரிபொருள் மற்றும் ரசாயன சேமிப்பு நிறுவனமான ‘ஈவோஸ்’ நிறுவனத்தை 2.8 பில்லியன் அமெரிக்க டாலருக்கு (ரூ.26,434 கோடி) முழுமையாக கையகப்படுத்த உள்ளதாக அதானி போர்ட்ஸ் நிறுவனம் அறிவித்துள்ளது.

நெதர்லாந்தின் ஆம்ஸ்டர்டாம் நகரைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் 'ஈவோஸ்' நிறுவனம், ஐரோப்பாவின் 2-வது பெரிய தன்னாட்சி திரவ சேமிப்பு நிறுவனமாகும். இந்த நிறுவனம் நெதர்லாந்து உள்ளிட்ட ஐரோப்பாவின் சர்வதேச முக்கியத்துவம் வாய்ந்த துறைமுகங்களில், அதிநவீன சேமிப்புக் கிடங்குகளைக் கொண்டுள்ளது.

கச்சா எண்ணெய், பெட்ரோலியப் பொருட்கள், ரசாயனங்கள் மற்றும் எதிர்காலத் தேவைகளுக்கான பசுமை உயிரி எரி பொருட்களைப் பாதுகாப்பாக சேமித்து, விநியோகிக்கும் கட்டமைப்பு வசதிகளை இந்நிறுவனம் வைத்துள்ளது.

ஈவோஸ் நிறுவனத்தின் 100 சதவீதப் பங்குகளையும் அதானி நிறுவனம் முழுமையாக வாங்குகிறது. இந்தியாவின் பெரிய தனியார் துறைமுக மற்றும் தளவாட நிறுவனமான அதானி போர்ட்ஸ் அண்ட் ஸ்பெஷல் எகனாமிக் ஜோன், ஈவோஸ் நிறுவனத்தின் தற்போதைய உரிமையாளரான 'இக்னியோ இன்ஃப்ராஸ்ட்ரக்சர்' நிறுவனத்திடமிருந்து இதை வாங்க ஒப்பந்தம் செய்துள்ளது.

இந்த ஒப்பந்தத்தின் மொத்த நிறுவன மதிப்பு சுமார் 2.56 பில்லியன் யூரோவாகும். அதாவது 2.88 பில்லியன் அமெரிக்க டாலர் (ரூ.26,434 கோடி) என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
சர்வதேச ஒழுங்குமுறை அமைப்புகளின் சட்டரீதியான ஒப்புதல்களைப் பெற்று, அடுத்த 15 மாதங்களுக்குள் இந்த கையகப்படுத்தல் நடைமுறைகள் அனைத்தும் முழுமையாக நிறைவடையும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த ஒப்பந்தத்தின் மூலம், உள்நாட்டு சந்தையைத் தாண்டி ஐரோப்பிய எரிசக்தி சந்தையிலும், உலகளாவிய விநியோகச் சங்கிலியிலும் அதானி குழுமம் நேரடியாக தனது வர்த்தக கால்தடத்தைப் பதிக்கிறது. மேலும், இந்த நிறுவனத்தின் முனையங்கள் மிக முக்கிய வணிக நுழைவுவாயிலாக மாறும் என்பதால், அதானி குழுமத்துக்கு சர்வதேச அளவில் மிகப்பெரிய வணிக லாபம் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

முந்தைய செய்தி
ஓர்க்லா நிறுவனத்தின் நிகர லாபம் 19.2% உயர்வு
அடுத்த செய்தி
சர்வோடெக் நிகர லாபம் ரூ.9.74 கோடியாக உயர்வு

தொடர்புடைய செய்திகள்