Search

Saved articles

You have not yet added any article to your bookmarks!

Browse articles

GDPR Compliance

We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

ஃபிரிட்ஜ்களில் இணையத் தாக்குதல்? இது புதுசா இருக்குண்ணே..புதுசா இருக்கு!

ஃபிரிட்ஜ்களில் இணையத் தாக்குதல்? இது புதுசா இருக்குண்ணே..புதுசா இருக்கு!

திங்கள்கிழமை அதிகாலையில் தொடங்கியதாகக் கூறப்படும் இணையத் தாக்குதலில், கடைகளின் குளிர்சாதனப் பெட்டிகளில் வெப்பநிலை திடீரென உயர்ந்தது.

பகிரவும் WhatsApp Facebook

இரவு முழுவதும் உணவைப் பாதுகாக்க வேண்டிய குளிர்சாதனப் பெட்டிகளே, காலையில் உணவைத் தூக்கி எறியக் காரணமாகின. ஐரோப்பாவின் ஒன்பது நாடுகளில் பல்பொருள் அங்காடிகளின் குளிரூட்டும் அமைப்புகள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், உணவு விநியோகத்தைச் சீர்குலைக்கும் திட்டமிட்ட முயற்சி இது என ஐரோப்பிய ஒன்றியம் எச்சரித்துள்ளது.

திங்கள்கிழமை அதிகாலையில் தொடங்கியதாகக் கூறப்படும் இணையத் தாக்குதலில், கடைகளின் குளிர்சாதனப் பெட்டிகளில் வெப்பநிலை திடீரென உயர்ந்தது. உறைந்த உணவுகள் கெட்டுப்போனதால், சில நிறுவனங்கள் அவற்றை அகற்ற வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டன. பெல்ஜியம், எஸ்டோனியா, பின்லாந்து, அயர்லாந்து, இத்தாலி, லக்சம்பர்க், நெதர்லாந்து, போர்ச்சுகல், சுவீடன் ஆகிய நாடுகளில் பாதிப்புகள் பதிவாகின. எஸ்டோனியாவில் ஓர் அங்காடியின் குளிரூட்டும் சாதனங்களின் வெப்பநிலையை ஊடுருவல்காரர்கள் 50 டிகிரி செல்சியஸ் வரை உயர்த்தியதாக அந்நாட்டு ஊடகம் தெரிவித்தது.

இத்தாலியில் அதிகாலை நான்கு மணிக்கு உறைந்த உணவுப் பிரிவுகளின் தொலைக் கட்டுப்பாட்டு அமைப்பு குறிவைக்கப்பட்டதாகக் கடை நிர்வாகி ஒருவர் கூறினார். பெல்ஜியத்தில் பல்வேறு நிறுவனங்களின் ஏராளமான கடைகள் பாதிக்கப்பட்டன. இதுதொடர்பாக அந்நாட்டு அரசுத் தரப்பு வழக்கறிஞர்கள் விசாரணையைத் தொடங்கியுள்ளனர்.
அயர்லாந்தில் 13 சூப்பர்வாலு கடைகளும், போர்ச்சுகலில் ஏழு இன்டர்மார்ஷே கடைகளும் பாதிக்கப்பட்டன. சுவீடனில் கூப் நிறுவனத்தின் ஆறு கடைகளில் ஏற்பட்ட சிக்கல் சரிசெய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

வெளிப்புற நிறுவனங்கள் வழங்கும் குளிரூட்டும் கட்டுப்பாட்டு அமைப்புகள் சில இடங்களில் தொடர்புடையதாகக் கூறப்படுகிறது. சுவீடனில் பாதிக்கப்பட்ட ஐகா கடைகள், டென்மார்க்கின் டான்ஃபாஸ் நிறுவனம் வழங்கிய அமைப்பைப் பயன்படுத்தியதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மூன்று வாரங்களுக்கு முன்பு பிரான்சிலும் இதேபோன்ற தாக்குதலால் நூற்றுக்கணக்கான கடைகள் உணவுகளை அகற்றின. இரு சம்பவங்களுக்கும் இதுவரை யாரும் பொறுப்பேற்கவில்லை.

உணவு விநியோகத்தைச் சீர்குலைத்து, நுகர்வோரின் நம்பிக்கையைத் தகர்க்கும் முயற்சி என்று ஐரோப்பிய ஒன்றிய ஆணையர் கிறிஸ்டோப் ஹான்சன் கண்டித்துள்ளார்.
பின்லாந்தில் சில கடைகளில் வெப்பநிலை மாறுபாடுகள் கண்டறியப்பட்டாலும், காரணம் இன்னும் விசாரணையில் உள்ளது. அங்கு இணையவழி குறுக்கீட்டுக்கான வாய்ப்பு நிராகரிக்கப்படவில்லை. பழைய கட்டுப்பாட்டு அமைப்புகள், வெளிப்புறச் சேவை இணைப்புகள் ஆகியவற்றின் பாதுகாப்பு குறித்த கவலையையும் சம்பவங்கள் அதிகரித்துள்ளன. உணவைப் பாதுகாக்கும் தொழில்நுட்பமே தாக்குதலுக்கான வாசலாகியிருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளது. விசாரணை தொடர்ந்து நடைபெறுகிறது.

முந்தைய செய்தி
2036 ஒலிம்பிக்கை நடத்த ஆர்வம் காட்டும் இந்தியா: போட்டா போட்டியில் ஏழு நாடுகள்
அடுத்த செய்தி
Claims US is world's largest supplier of oil

தொடர்புடைய செய்திகள்