Search

Saved articles

You have not yet added any article to your bookmarks!

Browse articles

GDPR Compliance

We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

மகாராஷ்டிர மின் நிறுவன பங்கு வெளியீடு

மகாராஷ்டிர மின் நிறுவன பங்கு வெளியீடு

பங்குச் சந்தையில் பட்டியலிடுவதற்கு முன், நிறுவனத்தின் நிதிநிலையைச் சீரமைக்க மகாராஷ்டிர அரசு ஏப்ரலில் ஒப்புதல் அளித்தது.

பகிரவும் WhatsApp Facebook

மகாராஷ்டிர அரசின் மின் விநியோக நிறுவனமான எம்எஸ்இடிசிஎல், 2027 பிப்ரவரிக்குள் முதன்மைப் பங்கு வெளியீட்டைத் தொடங்கி, ரூ.10,000 கோடிக்கு மேல் திரட்டத் திட்டமிட்டுள்ளது. இதற்கான வரைவு ஆவணத்தை டிசம்பர் முதல் வாரத்தில் தாக்கல் செய்யலாம் என எதிர்பார்ப்பதாக நிறுவனத் தலைவரும் நிர்வாக இயக்குநருமான லோகேஷ் சந்திரா தெரிவித்தார்.

பங்குச் சந்தையில் பட்டியலிடுவதற்கு முன், நிறுவனத்தின் நிதிநிலையைச் சீரமைக்க மகாராஷ்டிர அரசு ஏப்ரலில் ஒப்புதல் அளித்தது. அதன்படி, நிறுவனத்தின் ரூ.32,679 கோடி கடனை மாநில அரசு ஏற்கவும், விவசாய மின் விநியோகப் பிரிவைத் தனியாகப் பிரிக்கவும் முடிவு செய்யப்பட்டது. 

இந்நிறுவனம் சுமார் 3.4 கோடி மின் நுகர்வோருக்குச் சேவை வழங்குகிறது. 2025–26 நிதியாண்டில் நிறுவனத்தின் செயல்பாட்டு வருவாய் 6.5 சதவீதம் உயர்ந்து சுமார் ரூ.1.29 லட்சம் கோடியை எட்டியது. அதே காலத்தில், நிகர லாபம் ரூ.940.84 கோடியிலிருந்து ரூ.930.62 கோடியாகக் குறைந்தது. மார்ச் 31 நிலவரப்படி, விவசாயப் பிரிவையும் உள்ளடக்கிய நிறுவனத்தின் மொத்தத் திரண்ட இழப்பு ரூ.35,551.92 கோடியாக இருந்தது.

முந்தைய செய்தி
டைட்டன் துணைத் தலைவர் பதவி - நவ. 12-ல் நோயல் டாடா ஓய்வு
அடுத்த செய்தி
காதலியின் விவரங்களை கேட்டவருக்கு தகவல் ஆணையம் கண்டனம்

தொடர்புடைய செய்திகள்