Search

Saved articles

You have not yet added any article to your bookmarks!

Browse articles

GDPR Compliance

We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

காதலியின் விவரங்களை கேட்டவருக்கு தகவல் ஆணையம் கண்டனம்

காதலியின் விவரங்களை கேட்டவருக்கு தகவல் ஆணையம் கண்டனம்

தகவல் உரிமைச் சட்டத்தின் கீழ் மனு தாக்கல் செய்ய அவருக்கு ஓராண்டு தடை

பகிரவும் WhatsApp Facebook

முன்னாள் காதலியின் காதல் விவரங்களை தகவல் உரிமை சட்டத்தின் கீழ் கேள்வி எழுப்பி 97 மனுக்கள் தாக்கல் செய்த இளைஞருக்கு மாநில தகவல் ஆணையம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த சந்தோஷ் என்பவர், 2021-2024-ம் ஆண்டுகளில் கல்லூரியில் படித்தபோது, உடன் படித்த பெண்ணைக் காதலித்துள்ளார். சந்தோஷ் தொந்தரவு செய்ததால், அந்தப் பெண் தற்கொலைக்கு முயற்சித்ததால் காதலை கைவிட்டதாக கூறப்படுகிறது.


இந்நிலையில், முன்னாள் காதலி தற்போது யாரைக் காதலிக்கிறார், இதற்குமுன் எத்தனை பேரைக் காதலித்துள்ளார், திருமணம் ஆகிவிட்டதா, உயிரோடு இருக்கிறாரா என்பன உள்ளிட்ட 1,886 கேள்விகளை எழுப்பி, கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் உள்ள பொது தகவல் அதிகாரிக்கு, தகவல் உரிமை சட்டத்தின் கீழ் 97 விண்ணப்பங்களை அனுப்பி உள்ளார்.


இந்த தகவல்களை வழங்கவில்லை என கடலூர் எஸ்.பி. அலுவலக பொதுத் தகவல் அதிகாரிக்கு எதிராக சந்தோஷ், சென்னையில் உள்ள மாநில தகவல் ஆணையத்தில் மேல்முறையீடு செய்துள்ளார். இந்த மனுவை விசாரித்த ஆணையர் வி.பி.ஆர்.இளம்பரிதி, தகவல் உரிமை சட்டத்தின் நோக்கத்தை சிதைக்கும் வகையிலும், அரசு ஊழியர்களுக்கு தேவையற்ற பணிச்சுமையை ஏற்படுத்தக்கூடும் வகையிலும், எந்த பொதுநலனும் இல்லாமல் செயல்பட்டுள்ளதாக சந்தோஷுக்கு கண்டனம் தெரிவித்தார்.


மேலும், சந்தோஷ் கோரிய எந்த தகவலையும் வழங்க முடியாது எனவும், தகவல் உரிமைச் சட்டத்தின் கீழ் மனு தாக்கல் செய்ய அவருக்கு ஓராண்டு தடை விதித்தும் உத்தரவிட்ட மாநில தகவல் ஆணையம், சந்தோஷுக்கு மனநல ஆலோசனை வழங்குமாறு மாவட்ட சுகாதாரத் துறைக்கு உத்தரவிட்டுள்ளது.

முந்தைய செய்தி
மகாராஷ்டிர மின் நிறுவன பங்கு வெளியீடு
அடுத்த செய்தி
தமிழகத்தில் தொழில் முதலீடுகளை ஊக்குவிக்க புதிய ஆணையம்

தொடர்புடைய செய்திகள்