Search

Saved articles

You have not yet added any article to your bookmarks!

Browse articles

GDPR Compliance

We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

Tata Motors பங்குக்கு ரூ.511 இலக்கு: Nomura கணிப்பு

Tata Motors பங்குக்கு ரூ.511 இலக்கு: Nomura கணிப்பு

ஐவெகோவின் தொழில்துறை செயல்பாட்டு லாப வரம்பு 2.8 சதவீதத்திலிருந்து பூஜ்ஜியமாகச் சரிந்துள்ளது.

பகிரவும் WhatsApp Facebook

ஐவெகோ நிறுவனத்தின் லாப வரம்பு சரிந்தபோதிலும், டாடா மோட்டார்ஸ் வர்த்தக வாகனப் பங்கு 27 சதவீதம் உயர வாய்ப்புள்ளதாக நோமுரா தெரிவித்துள்ளது.

டாடா மோட்டார்ஸ் வர்த்தக வாகனப் பிரிவின் (TMCV) பங்குக்கு ரூ.511 இலக்கு விலையை சர்வதேச தரகு நிறுவனமான நோமுரா தக்கவைத்துள்ளது.

டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் துணை நிறுவனமான ஐவெகோவின் வருவாய், 2026 மூன்றாவது காலாண்டில் ஓராண்டுக்கு முந்தைய காலத்துடன் ஒப்பிடுகையில் ஒரு சதவீதம் மட்டுமே உயர்ந்துள்ளது. முந்தைய காலாண்டில் வளர்ச்சி 7 சதவீதமாக இருந்தது.

ஐவெகோவின் தொழில்துறை செயல்பாட்டு லாப வரம்பு 2.8 சதவீதத்திலிருந்து பூஜ்ஜியமாகச் சரிந்துள்ளது. கட்டற்ற பணப்புழக்கப் பற்றாக்குறை 65.6 கோடி யூரோவாக அதிகரித்துள்ளது.

ஐரோப்பிய வர்த்தக வாகனச் சந்தையில் தேவை மந்தமாக இருப்பது சவாலாக உள்ளது. இருப்பினும், செலவுக் குறைப்பு மற்றும் ஒருங்கிணைப்பு நடவடிக்கைகளால் 2028–29 நிதியாண்டுகளில் லாபம் படிப்படியாக மேம்படும் என நோமுரா எதிர்பார்க்கிறது.

ஐவெகோ கையகப்படுத்தலுக்காகப் புதிய பங்குகளை வெளியிட வேண்டிய அவசியமில்லை என்றும் தெரிவித்துள்ளது.

முந்தைய செய்தி
முதலீட்டாளர்கள் கவனத்திற்கு- சாத்விக் கிரீன் எனர்ஜி லாபம் 76% சரிவு
அடுத்த செய்தி
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சிறப்புப் பேருந்துகள் இயக்கம்

தொடர்புடைய செய்திகள்