Search

Saved articles

You have not yet added any article to your bookmarks!

Browse articles

GDPR Compliance

We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சிறப்புப் பேருந்துகள் இயக்கம்

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சிறப்புப் பேருந்துகள் இயக்கம்

ஐந்து இடங்களில் அமைந்துள்ள பேருந்து நிலையங்களிலிருந்து சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படுகின்றன.

பகிரவும் WhatsApp Facebook

சிறப்புப் பேருந்துகள் இயக்க விவரம்


2026-ஆம் ஆண்டு தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, சென்னையில் பின்னரும் ஐந்து இடங்களில் அமைந்துள்ள பேருந்து நிலையங்களிலிருந்து சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படுகின்றன:

  • கலைஞர் நூற்றாண்டு பேருந்து முனையம் (KCBT), கிளாம்பாக்கம்.
  • புரட்சித் தலைவர் டாக்டர் எம்.ஜி.ஆர். பேருந்து நிலையம், கோயம்பேடு.
  • மாதவரம் புதிய பேருந்து நிலையம்.
  • CMDA காலநிலைப் பூங்கா தற்காலிகப் பேருந்து நிலையம்.
  • மறைமலைநகர் தற்காலிகப் பேருந்து நிலையம்.

05.11.2026 முதல் 07.11.2026 வரை ஆகிய மூன்று நாட்களில், சென்னையிலிருந்து வழக்கமாக இயக்கப்படும் தினசரிப் பேருந்துகள் 6,573 உடன், 9,086 சிறப்புப் பேருந்துகள் (அரசு போக்குவரத்துக் கழக சிறப்புப் பேருந்துகள் 7,427, தனியார் பேருந்துகள் 1,659) என மொத்தம் 15,659 பேருந்துகள் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.

நாள்வாரியாக, 05.11.2026 அன்று 2,191 வழக்கமான பேருந்துகள் மற்றும் 2,870 சிறப்புப் பேருந்துகள் என மொத்தம் 5,061 பேருந்துகளும், 06.11.2026 அன்று 2,191 வழக்கமான பேருந்துகள் மற்றும் 3,240 சிறப்புப் பேருந்துகள் என மொத்தம் 5,431 பேருந்துகளும், 07.11.2026 அன்று 2,191 வழக்கமான பேருந்துகள் மற்றும் 2,976 சிறப்புப் பேருந்துகள் என மொத்தம் 5,167 பேருந்துகளும் இயக்கத் திட்டமிடப்பட்டுள்ளன.

இதில், 05.11.2026 அன்று இரவு 12.00 மணி நிலவரப்படி 2,191 வழக்கமான பேருந்துகள் மற்றும் 1,018 சிறப்புப் பேருந்துகள் (அரசு போக்குவரத்துக் கழக சிறப்புப் பேருந்துகள் 862, தனியார் பேருந்துகள் 156) என மொத்தம் 3,209 பேருந்துகள் இயக்கப்பட்டு, 1.40 லட்சம் பயணிகள் பயணம் செய்துள்ளனர்.

முந்தைய செய்தி
Tata Motors பங்குக்கு ரூ.511 இலக்கு: Nomura கணிப்பு
அடுத்த செய்தி
தமிழகத்தில் 7 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு

தொடர்புடைய செய்திகள்