Search

Saved articles

You have not yet added any article to your bookmarks!

Browse articles

GDPR Compliance

We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

தங்கம் விலை உயர்வு; நகை நிறுவனப் பங்குகளுக்கு வாய்ப்பு

தங்கம் விலை உயர்வு; நகை நிறுவனப் பங்குகளுக்கு வாய்ப்பு

கடன் சுமையிலிருந்து மீண்டுள்ள பிசி ஜுவல்லர் பங்கு அதிக ரிஸ்க் கொண்டதாக இருந்தாலும், அதிக லாப வாய்ப்புள்ளதாகக் கருதப்படுகிறது.

பகிரவும் WhatsApp Facebook

தங்கம், வெள்ளி விலைகள் மீண்டும் உயரத் தொடங்கியுள்ள நிலையில், முன்னணி நகை நிறுவனங்களின் பங்குகளில் முதலீடு செய்வது லாபகரமாக அமையலாம் என சந்தை நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

அமெரிக்க இடைக்காலத் தேர்தல் முடிவுகளுக்கு மத்தியில், இந்திய சந்தையில் தங்கம், வெள்ளி ஆகியவற்றின் விலை நேற்று உயர்ந்த்து.

இதனால் கல்யாண் ஜுவல்லர்ஸ், பிசி ஜுவல்லர், சென்கோ கோல்டு, லலிதா ஜுவல்லரி நிறுவனங்களின் பங்குகள் முதலீட்டாளர்களின் கவனத்தை ஈர்த்துள்ளன.

குறிப்பாக, கடன் சுமையிலிருந்து மீண்டுள்ள பிசி ஜுவல்லர் பங்கு அதிக ரிஸ்க் கொண்டதாக இருந்தாலும், அதிக லாப வாய்ப்புள்ளதாகக் கருதப்படுகிறது.

சென்கோ கோல்டு நிறுவனத்தின் ஒரே கடையில் நடைபெறும் விற்பனை 19 சதவீதம் வளர்ச்சியடைந்துள்ளது. கடந்த 12 மாத விற்பனை ரூ.10,000 கோடியைத் தாண்டியுள்ளது.

546 விற்பனை நிலையங்களைக் கொண்ட கல்யாண் ஜுவல்லர்ஸ், நீண்டகால முதலீட்டாளர்களுக்குப் பொருத்தமான தேர்வாக இருக்கும் என நிபுணர்கள் பரிந்துரைத்துள்ளனர். இருப்பினும், தங்கம் விலை ஏற்ற இறக்கங்களைக் கருத்தில் கொண்டு முதலீடு செய்ய அறிவுறுத்தியுள்ளனர்.

முந்தைய செய்தி
டௌரியன் நிறுவன லாபம் 2 மடங்கு உயர்வு
அடுத்த செய்தி
2 நாட்களில் ஐடிசி பங்கு 6% உயர்வு

தொடர்புடைய செய்திகள்