Search

Saved articles

You have not yet added any article to your bookmarks!

Browse articles

GDPR Compliance

We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

ரேஷன் கடைகளில் வேட்டி, சேலை விநியோகம்

ரேஷன் கடைகளில் வேட்டி, சேலை விநியோகம்

தீபாவளியை முன்னிட்டு விலையில்லா வேட்டி, சேலைகள் ரேஷன் கடைகள் வாயிலாக தொடர்ந்து வழங்கப்படுகிறன.

பகிரவும் WhatsApp Facebook

தீபாவளியை முன்னிட்டு, தமிழகத்தில் முதியோர் ஓய்வூதியம் பெறும் பயனாளிகளுக்கு நியாய விலைக் கடைகள் மூலம் விலையில்லா வேட்டி, சேலைகள் வழங்கும் பணி நேற்று முதல் தொடங்கப்பட்டுள்ளது.

இது குறித்து கூட்டுறவு துறை தெரிவித்துள்ளதாவது: தமிழ்நாடு அரசு சார்பில் ஆண்டுதோறும் தீபாவளியை முன்னிட்டு, முதியோர் ஓய்வூதியம் பெற்று வரும் குடும்ப அட்டைதாரர்களுக்கு விலையில்லா வேட்டி, சேலைகள் ரேஷன் கடைகள் வாயிலாக தொடர்ந்து வழங்கப்படுகிறன. 

இந்த தீபாவளிக்காக வேட்டி மற்றும் சேலைகள் அனைத்தும் உரிய முறையில் கொள்முதல் செய்யப்பட்டு, தற்போது தமிழ்நாடு முழுவதும் உள்ள நியாய விலைக் கடைகளுக்கு நகர்வு செய்யப்பட்டு விநியோகத்திற்குத் தயார் நிலையில் வைக்கப்பட்டு இருந்தன.

இதனை விநியோகிக்கும் பணி ரேஷன் கடைகளில் நேற்று முதல் தொடங்கப்பட்டுள்ளது. முதியோர் ஓய்வூதியம் பெறும் பயனாளிகள் தங்களது குடும்ப அட்டையுடன் ரேஷன்கடைகளுக்கு நேரில் சென்று, வரும் 7-ம் தேதிக்குள் பெற்றுக் கொள்ளலாம். இவ்வாறு கூட்டுறவு துறை தெரிவித்துள்ளது .

முந்தைய செய்தி
Adani Airports CEO calls for three Indian global carriers
அடுத்த செய்தி
'Renewables could save another $100 billion by 2030'

தொடர்புடைய செய்திகள்