Search

Saved articles

You have not yet added any article to your bookmarks!

Browse articles

GDPR Compliance

We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

6 வகை ஐஸ்கிரீம்களுடன் கேவின்ஸ் சிறப்பு பேக் அறிமுகம்

6 வகை ஐஸ்கிரீம்களுடன் கேவின்ஸ் சிறப்பு பேக் அறிமுகம்

இந்தப் பேக்கில் தலா 100 மி.லி. அளவுள்ள 6 கப் ஐஸ்கிரீம்கள் இடம்பெற்றுள்ளன.

பகிரவும் WhatsApp Facebook

பண்டிகைக் காலக் கொண்டாட்டங்கள் மற்றும் குடும்ப நிகழ்ச்சிகளை மேலும் இனிமையாக்கும் வகையில், கேவின்கேர் நிறுவனத்தின் முன்னணி பிராண்டான கேவின்ஸ், பிரீமியம் ஐஸ்கிரீம் வரிசையில் பிரத்யேக 'செலிபிரேஷன் பேக்' அறிமுகப்படுத்தியுள்ளது.


இந்தப் பேக்கில் தலா 100 மி.லி. அளவுள்ள 6 கப் ஐஸ்கிரீம்கள் இடம்பெற்றுள்ளன. குடும்ப விழாக்கள், நண்பர்களுடனான சந்திப்புகள் மற்றும் பரிசளிப்பு நிகழ்ச்சிகளுக்கு ஏற்ற வகையில் இது வடிவமைக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து கேவின்கேர் நிறுவனத்தின் குளிர்சாதனப் பொருட்கள் பிரிவு வணிகத் தலைவர் ஸ்ரீவத்சன் கிருஷ்ணமூர்த்தி கூறுகையில், பண்டிகைக் காலங்களில் உணவுப் பொருட்களைத் தேர்வு செய்வதில் நுகர்வோரின் விருப்பங்கள் மாறி வருகின்றன. 


தனிநபர் பயன்பாட்டைக் கடந்து, குடும்பத்தினரும் நண்பர்களும் ஒன்றாகச் சுவைத்து மகிழும் வகையில் இந்தப் புதிய பேக் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது என்றார். கேவின்ஸ் பிரீமியம் ஐஸ்கிரீம்கள் பழங்கள், சாக்லேட், குக்கீஸ், பருப்புகள் மற்றும் பாரம்பரிய இந்திய இனிப்புகள் உள்ளிட்டவற்றைக் கொண்டு தயாரிக்கப்படுகின்றன. பசும்பாலை அடிப்படையாகக் கொண்டு தயாரிக்கப்படும் இந்த வரிசையில் 24 வகையான சுவைகள் உள்ளன.


இந்தச் சிறப்புப் பேக் சென்னையில் ஸ்விக்கி, சொமாட்டோ ஆகிய உணவு விநியோகச் செயலிகள் மூலம் பண்டிகைக் காலம் முழுவதும் கிடைக்கும் என நிறுவனம் தெரிவித்துள்ளது.

முந்தைய செய்தி
வங்கி முறைகேடு வழக்கில் பராகுவே முன்னாள் அதிபர் கைது
அடுத்த செய்தி
IPO மூலம் ரூ.8,800 கோடி திரட்டுகிறது மகாநதி

தொடர்புடைய செய்திகள்