Search

Saved articles

You have not yet added any article to your bookmarks!

Browse articles

GDPR Compliance

We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

தீபாவளிக்கு சிறப்பு ரயில்கள் அறிவிப்பு - முழு விவரம்

தீபாவளிக்கு சிறப்பு ரயில்கள் அறிவிப்பு - முழு விவரம்

தீபாவளியையொட்டி முன்பதிவில்லா சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது.

பகிரவும் WhatsApp Facebook

தீபாவளியையொட்டி பயணிகள் கூட்ட நெரிசலை தவிர்க்க சென்னை தாம்பரம்-மானாமதுரை இடையே முன்பதிவில்லா சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது.


தாம்பரத்தில் இருந்து நாளை மாலை 5.30 மணிக்கு புறப்படும் இந்த முன்பதிவில்லா சிறப்பு ரயில் (06161), மறுநாள் அதிகாலை 3.45மணிக்கு மானாமதுரை சென்றடையும். மானாமதுரையில் நவ.7ம் தேதி காலை 6.30 மணிக்கு புறப்படும் சிறப்பு ரயில் (06162), அதே நாள் மாலை 3.45மணிக்கு தாம்பரம் வந்தடையும்.

மீண்டும் தாம்பரத்தில் இருந்து நவ.7ம் தேதி மாலை 4.35 மணிக்கு புறப்படும் இந்த முன்பதிவில்லா சிறப்பு ரயில் (06159), மறுநாள் அதிகாலை 1.45மணிக்கு மானாமதுரை சென்றடையும். மானாமதுரையில் நவ.9ம் தேதி இரவு 10.00 மணிக்கு புறப்படும் சிறப்பு ரயில் (06160), அதே நாள் காலை 8.30 மணிக்கு தாம்பரம் வந்து சேரும்.

சென்னை எழும்பூரில் இருந்து நாளை மாலை 6.30 மணிக்கு புறப்படும் முன்பதிவில்லா சிறப்பு ரயில் (06191) மறுநாள்அதிகாலை 4.45மணிக்கு திருச்சி சென்றடையும். திருச்சியில் இருந்து நவ.7ம் தேதி காலை 5.50 மணிக்கு புறப்படும் முன்பதிவில்லா சிறப்பு ரயில் (06192) அதே நாள் பகல் 11.30 மணிக்கு சென்னை தாம்பரம் வந்து சேரும்.

சென்னை எழும்பூரில் இருந்து நவ.7ம் தேதி இரவு 7.00 மணிக்கு புறப்படும் முன்பதிவில்லா சிறப்பு ரயில் (06193) மறுநாள் அதிகாலை 4.45மணிக்கு திருச்சி சென்றடையும். திருச்சியில் இருந்து நவ.9ம் தேதி இரவு 10.45மணிக்கு புறப்படும் முன்பதிவில்லா சிறப்பு ரயில் (06194) மறுநாள் காலை 6.50 மணிக்கு சென்னை எழும்பூர் வந்து சேரும். இந்த சிறப்பு ரயில்களில் கழிவறை வசதியுடன் 12 பெட்டிகள் இணைக்கப்பட்டது.

தாம்பரம்-நெல்லை ரயில்

தாம்பரத்தில் இருந்து நாளை இரவு 7.30 மணிக்கு புறப்படும் சிறப்பு ரயில் (06111), மறுநாள் காலை 9.20 மணிக்கு திருநெல்வேலி சென்றடையும்.
திருநெல்வேலியில் இருந்து நவ.9ம் தேதி இரவு 7.00 மணிக்கு புறப்படும் சிறப்பு ரயில் (06112) மறுநாள் காலை 9 மணிக்கு தாம்பரம் வந்தடையும்.

இந்த ரயில்கள் செங்கல்பட்டு, விழுப்புரம், விருத்தாச்சலம், அரியலூர், ஸ்ரீரங்கம், திருச்சிராப்பள்ளி, புதுக்கோட்டை, காரைக்குடி, தேவக்கோட்டை ரோடு, சிவகங்கை, மானாமதுரை, அருப்புக்கோட்டை, பம்பாகோவில் சந்தை, கடையநல்லூர், தென்காசி, பாவூர்சத்திரம், அம்பாசமுத்திரம், சேரன்மாதேவி உள்ளிட்ட ரயில் நிலையங்களில் நிற்கும்.

கூடுதல் பெட்டிகள் இணைப்பு

தெற்கு ரயில்வே வழக்கமான எக்ஸ்பிரஸ் ரயில்களில் நவ.6 முதல் நவ.11ம் தேதி வரை தலா ஒரு பெட்டியை இணைக்க உள்ளது. இதன்படி சென்னை சென்ட்ரல்-கோவை-சென்னை சென்ட்ரல் எக்ஸ்பிரஸ் (12243/12244), சென்ட்ரல்-மைசூரு-சென்னை சென்ட்ரல் எக்ஸ்பிரஸ் (12007/12008) ரயில்களில் தலா ஒரு உட்காரும் வசதி கொண்ட ஏசி பெட்டி இணைக்கப்படுகிறது.

இதேபோல், தாம்பரம்-கொல்லம்-தாம்பரம்(16101/16102) எக்ஸ்பிரஸ், சென்னை எழும்பூர் தஞ்சாவூர்-சென்னை எழும்பூர் எக்ஸ்பிரஸ் (16865/16866), சென்னை எழும்பூர்-கொல்லம் எக்ஸ்பிரஸ் (20635/20636), சென்னை எழும்பூர்-மங்களூர்-சென்னை எழும்பூர் எக்ஸ்பிரஸ் (16159/16160), தாம்பரம்-ராமேஸ்வரம்-தாம்பரம் எக்ஸ்பிரஸ் (16103/16104), சென்னை எழும்பூர்-ராமேஸ்வரம்-சென்னை எழும்பூர் (16751/16752), சென்னை சென்ட்ரல்-ஆலப்புழை-சென்னை சென்ட்ரல் எக்ஸ்பிரஸ் (22639/22640), சென்னை-ராமேஸ்வரம்-திருப்பதி-ராமேஸ்வரம் எக்ஸ்பிரஸ் (16779/16780) ரயில்களில் தலா ஒரு தூங்கும் வசதி கொண்ட 2ம் வகுப்பு பெட்டி இணைக்கப்படுகிறது.
முந்தைய செய்தி
வாகனக் காப்பீட்டில் 4 அடுக்கு முறை; டிசம்பர் 15 முதல் அமல்
அடுத்த செய்தி
Eco-shop opened at Sirumalai

தொடர்புடைய செய்திகள்