Search

Saved articles

You have not yet added any article to your bookmarks!

Browse articles

GDPR Compliance

We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

தீபாவளி - மல்லிகை கிலோ ரூ.1,800-க்கு விற்பனை

தீபாவளி - மல்லிகை கிலோ ரூ.1,800-க்கு விற்பனை

கனகாம்பரம் போதிய வரத்து இல்லாததால், அதன் விலையும் கணிசமாக உயர்ந்தது.

பகிரவும் WhatsApp Facebook

தீபாவளியை முன்னிட்டு தேவை அதிகரிப்பால் மதுரை மாட்டுத்தாவணி மலர் சந்தையில் மல்லிகை விலை நேற்று ஒரு கிலோ ரூ.1800-ஆக உயர்ந்தது.

 பூக்களின் விலை நிலவரம் (ஒரு கிலோ) வருமாறு: மல்லிகை ரூ.1,800, கனகாம்பரம் ரூ.2,000, பிச்சி ரூ.1,000, முல்லை ரூ.1,000, அரளி ரூ.450, பட்டன் ரோஸ் ரூ.200, பன்னீர் ரோஸ் ரூ.250, ரோஸ் ரூ.150, செவ்வந்தி ரூ.150, சம்பங்கி ரூ.150, செண்டு மல்லி ரூ.70, கோழிக்கொண்டை ரூ.100, மரிக்கொழுந்து ரூ.100. தாமரை மலர் ஒன்று ரூ.35-க்கு விற்கப்பட்டது.

இதுகுறித்து வியாபாரிகள் கூறும்போது, "தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பூக்கள் தேவை அதிகரிப்பால் விலை உயர்ந்துள்ளது. மல்லிகை நேற்று முன்தினம் கிலோ ரூ.1,500-ஆக விற்கப்பட்ட நிலையில் நேற்று ரூ.1,800 வரை விலை உயர்ந்தது. 


கனகாம்பரம் போதிய வரத்து இல்லாததால், அதன் விலையும் கணிசமாக உயர்ந்தது. மற்ற பூக்களின் விலையும் அதிகரித்துள்ளது. தீபாவளிக்குப் பிறகு விலை குறைய வாய்ப்புள்ளது" என்றனர்.

முந்தைய செய்தி
IPO மூலம் ரூ.8,800 கோடி திரட்டுகிறது மகாநதி
அடுத்த செய்தி
முடக்கப்பட்ட ரஷ்ய சொத்துகள்; உக்ரைனுக்கு 4,940 கோடி டாலர் கடனுதவி

தொடர்புடைய செய்திகள்