Search

Saved articles

You have not yet added any article to your bookmarks!

Browse articles

GDPR Compliance

We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

அக்டோபர் மாதத்தில் 8% ஜிஎஸ்டி வளர்ச்சி - அமைச்சர் லோகேஷ் தமிழ்ச்செல்வன் தகவல்

அக்டோபர் மாதத்தில் 8% ஜிஎஸ்டி வளர்ச்சி - அமைச்சர் லோகேஷ் தமிழ்ச்செல்வன் தகவல்

மொத்த வசூலில் உள்ள ஒருங்கிணைந்த ஜி.எஸ்.டி-யின் பெரும்பகுதி இலக்கு மாநிலங்களுக்கே பிரித்து வழங்கப்பட்டுவிடும்.

பகிரவும் WhatsApp Facebook

தமிழகத்தின் பொருளாதார வளர்ச்சியை ஜி.எஸ்.டி மொத்த வருவாயை மட்டுமே அடிப்படையாகக் கொண்டு மதிப்பிடுவது தவறானது என வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் டி.லோகேஷ் தமிழ்ச்செல்வன் தெரிவித்துள்ளார்.

கடந்த அக்டோபர் மாதத்தில் அண்டை மாநிலங்களான கேரளா, கர்நாடகா, ஆந்திரா ஆகியவை இரட்டை இலக்க ஜி.எஸ்.டி வளர்ச்சியைப் பதிவு செய்த நிலையில், தமிழகம் 3.2 சதவீத வளர்ச்சியை மட்டுமே எட்டியது. மேலும், ரூ.1,614 கோடி மதிப்பிலான கொரிய வாகன உதிரிபாகங்கள் உற்பத்தி முதலீடு ஆந்திராவுக்குச் சென்றது. முதல்வர் விஜய் தலைமையிலான த.வெ.க அரசின் இந்த பொருளாதார சுணக்கம் குறித்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மற்றும் வீ த லீடர்ஸ் அமைப்பின் அண்ணாமலை ஆகியோர் கடுமையாக விமர்சித்திருந்தனர்.


இதற்குப் பதிலளித்து அமைச்சர் லோகேஷ் தமிழ்ச்செல்வன் வெளியிட்டுள்ள அறிக்கையில், "மாநிலத்தின் பொருளாதாரத்தை ஜி.எஸ்.டி மொத்த வசூலை வைத்து கணக்கிடுவது தவறான பிம்பத்தை ஏற்படுத்தும். மொத்த வசூலில் உள்ள ஒருங்கிணைந்த ஜி.எஸ்.டி-யின் பெரும்பகுதி இலக்கு மாநிலங்களுக்கே பிரித்து வழங்கப்பட்டுவிடும். 

ஆனால், மாநில ஜி.எஸ்.டி மற்றும் தமிழகத்திற்கான ஐ.ஜி.எஸ்.டி பங்கை உள்ளடக்கிய 'உண்மையான வருவாயை' கணக்கிட்டால், நடப்பு நிதியாண்டில் அக்டோபர் வரை தமிழகம் 15 சதவீத வளர்ச்சியையும், அக்டோபர் மாதத்தில் மட்டும் 8 சதவீத வளர்ச்சியையும் எட்டியுள்ளது," என்று தெரிவித்துள்ளார்.


மேலும், கடந்த செப்டம்பர் 2025-ல் பல பொருட்களுக்கான ஜி.எஸ்.டி வரி விகிதங்கள் குறைக்கப்பட்டதும் மொத்த வசூல் மிதமாக இருக்க ஒரு காரணம் என சுட்டிக்காட்டிய அவர், நிதித்துறையின் தரவுகளின்படி தமிழகத்தின் அடிப்படை பொருளாதாரம் தொடர்ந்து வலுவாகவே உள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

முந்தைய செய்தி
காத்திருப்புக் காலம் 12-ல் இருந்து 8 வாரங்களாக குறைப்பு
அடுத்த செய்தி
Loyola Mani inspects Textbook Corporation Office

தொடர்புடைய செய்திகள்