Search

Saved articles

You have not yet added any article to your bookmarks!

Browse articles

GDPR Compliance

We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

புத்தக கொள்முதலை விசாரிக்க சிறப்புக் குழு: அமைச்சர் ராஜ்மோகன்

புத்தக கொள்முதலை விசாரிக்க சிறப்புக் குழு: அமைச்சர் ராஜ்மோகன்

புத்தகக் கொள்முதலில் இந்தியாவிலேயே முதல் முறையாக ஏஐ மூலம் திமுக ஊழல் செய்துள்ளதாக அமைச்சர் ராஜ்மோகன் குற்றச்சாட்டு தெரிவித்துள்ளார்.

பகிரவும் WhatsApp Facebook

பெரியார் அறிவுலக நூலகத்திற்கு புத்தக கொள்முதலில் நடந்த ஊழல் குறித்து லஞ்ச ஒழிப்புத் துறையில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. மேலும், இதுதொடர்பாக விசாரிக்க சிறப்புக் குழு அமைக்கப்படும் என பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் ராஜ்மோகன் தெரிவித்தார்.

சென்னையில் இதுகுறித்து அவர் கூறியதாவது: பெரியார் அறிவுலகம் நூலகத்திற்கு புத்தகங்கள் வாங்குவதில் திமுக ஆட்சியில் ஊழல் நடந்துள்ளது. இதை மறைக்க எங்கள் மீது திமுக அவதூறு பரப்புகிறது. தவெக ஆட்சியில் ஒரு புத்தகம்கூட வாங்கவில்லை. 

கோவை பெரியார் அறிவுலகம் நூலகத்துக்காக, அகல் விளக்கு பதிப்பகத்துக்கு பிப்ரவரி 14-ம் தேதி ஆர்டர் கொடுக்கப்பட்டு, 7 நாட்களில் புத்தகங்கள் வாங்கப்பட்டுள்ளன. அகல் விளக்கு பதிப்பகத்தில் புத்தகங்கள் வாங்க திமுக அரசு அழுத்தம் கொடுத்துள்ளது. குப்பைகளை விட மோசமான புத்தகங்களை வாங்க திமுக அரசு கொள்முதல் ஆணை வழங்கியுள்ளது. இந்த புத்தகங்களை வாங்கியதற்கு மார்ச் 14-ம் தேதி பணப்பரிவர்த்தனை நடந்துள்ளது.

சென்னை கன்னிமாரா நூலகம் உட்பட பல்வேறு நூலகங்களுக்கு, போலி நூல்கள் கொள்முதல் செய்யப்பட்டுள்ளன. ஏஐ மூலம் உருவாக்கப்பட்ட போலியான புத்தகங்களை திமுக ஆட்சியில் வாங்கியுள்ளனர். புத்தகக் கொள்முதலில் இந்தியாவிலேயே முதல் முறையாக ஏஐ மூலம் திமுக ஊழல் செய்துள்ளது.

இதற்காக மாணவர்களிடமும், தமிழக மக்களிடமும் திமுக நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்க வேண்டும். புத்தக கொள்முதல் ஊழல் குறித்து விசாரிக்க சிறப்புக் குழு அமைக்கப்படும். பெரியார் அறிவுலக நூலக கட்டிடப் பணியில் ஊழல் நடந்துள்ளதா என்பது குறித்தும் விசாரிக்கப்படும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

முந்தைய செய்தி
Financing key hurdle to India's clean energy transition: Economist
அடுத்த செய்தி
மலை வாழை நேரடி ஏல விற்பனை தொடக்கம்

தொடர்புடைய செய்திகள்