Search

Saved articles

You have not yet added any article to your bookmarks!

Browse articles

GDPR Compliance

We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

அண்ணன் சீர் திட்டத்துக்கு தமிழக அரசு டெண்டர்

அண்ணன் சீர் திட்டத்துக்கு தமிழக அரசு டெண்டர்

இந்தத் திட்டத்தைச் செயல்படுத்த ரூ.812 கோடி ஒதுக்கீடு செய்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

பகிரவும் WhatsApp Facebook

அண்ணன் சீர் திட்டத்துக்குத் தேவையான தங்க நாணயம் மற்றும் பட்டுப் புடவையை கொள்முதல் செய்ய தமிழக அரசு டெண்டர் கோரி உள்ளது.

முதல்வர் விஜய் தலைமையிலான தவெக அரசு, தனது முதல் பட்ஜெட் தாக்கலின்போது, பெண்களின் திருமண நாளில் தமிழக அரசு சார்பில் எட்டு கிராம் தங்க நாணயம், ஒரு பட்டுப்புடவை அண்ணன் சீராக வழங்கப்படும் என நிதி அமைச்சர் மரிய வில்சன் அறிவித்தார். இதன்படி இந்தத் திட்டத்தைச் செயல்படுத்த ரூ.812 கோடி ஒதுக்கீடு செய்து
அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.


இந்நிலையில் நேற்று அண்ணன் சீர் திட்டத்துக்கு 2026-27ம் ஆண்டிற்கு 60,000 தங்க நாணயம் மற்றும் பட்டுப் புடவையை கொள்முதல் செய்ய சமூக நலத்துறை டெண்டர் கோரி உள்ளது. அதில், ஒரு தங்க நாணயம் 8 கிராம் எடையுடன் 22 கேரட் 916 ஹால்மார்க் தரம் கொண்டதாக இருக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


அதேபோல், பட்டுப் புடவையை பொறுத்தவரையில், சில்க் மார்க் மற்றும் ஹேண்ட்லுாம் மார்க் இருக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. பெறப்படும் ஒப்பந்தப் புள்ளிகள் டிசம்பர் 7 மற்றும் 8-ம் தேதிகளில் ஆய்வு செய்யப்பட்டு, டிசம்பர் மாத இறுதிக்குள் கொள்முதல் ஆணை இறுதி செய்யப்படும். திருமணமாகும் தகுதியான மணப்பெண்களுக்கு 8 கிராம் தங்க நாணயம் மற்றும் ஒரு பட்டுப் புடவை சீராக வழங்கப்படும்.


திட்டத்தின் பயனாளிகள் தகுதிகளாக, மணப்பெண்ணின் குடும்பத்தின் ஆண்டு வருமானம் ரூ. 2.5 லட்சத்துக்குள் இருக்க வேண்டும். அரசாணை வெளியிட்ட தேதிக்குப் பிறகு நடக்கும் திருமணங்கள் இத்திட்டத்தின் கீழ் வரப்பெறும். இதற்கான விண்ணப்பங்களை ஆன்லைனில் பெறுவதற்கான இணையதளம் விரைவில் அறிமுகப்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

முந்தைய செய்தி
Eco-shop opened at Sirumalai
அடுத்த செய்தி
ரானே குழும நிறுவன வருவாய் 34.5% உயர்வு

தொடர்புடைய செய்திகள்