Search

Saved articles

You have not yet added any article to your bookmarks!

Browse articles

GDPR Compliance

We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

காலி பாட்டில் வசூல் முறைகேட்டுக்கு முற்றுப்புள்ளி: டாஸ்மாக் சீர்திருத்த நடவடிக்கைக்கு மக்கள் வரவேற்பு

காலி பாட்டில் வசூல் முறைகேட்டுக்கு முற்றுப்புள்ளி: டாஸ்மாக் சீர்திருத்த நடவடிக்கைக்கு மக்கள் வரவேற்பு

இந்த திட்டத்துக்கு பொதுமக்கள் வரவேற்பு தெரிவித்துள்ள நிலையில், டாஸ்மாக் பணியாளர்கள் எதிர்ப்பு தெரிவித்து தமிழகம் முழுவதும் கடைகளை அடைத்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

பகிரவும் WhatsApp Facebook

காலி மதுபான பாட்டில்களை திரும்பபெறும் திட்டத்தில் நடந்து வந்த முறைகேட்டை தடுக்கும் வகையில் டாஸ்மாக் நிர்வாகம் மேற்கொண்டுள்ள நடவடிக்கைக்கு மக்கள் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.

கடந்த திமுக ஆட்சியில் ‘பார்ட்டி பண்ட்’ என்ற பெயரில் டாஸ்மாக் கடைகளில் விற்பனையாகும் பாட்டில் ஒன்றுக்கு ரூ.10 வீதம் கூடுதலாக வசூலிக்கப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது. மது அருந்துவோர் சாலையோரங்கள், விவசாய நிலங்கள், சுற்றுலா தளங்கள் உள்ளிட்ட இடங்களில் மது பாட்டில்களை வீசி செல்வதால் சுற்றுச்சூழல் பாதிப்பு ஏற்பட்டது. இது தொடர்பான வழக்கில், காலி மதுபான பாட்டில்களை டாஸ்மாக் நிர்வாகமே திரும்ப பெற திட்டம் வகுக்க நீதிமன்றம் உத்தரவிட்டது.

இதையடுத்து, தமிழகம் முழுவதும் விற்பனையாகும் மதுபான பாட்டில்களுக்கு அதிகபட்ச சில்லறை விலையுடன் ரூ. 10, கூடுதலாக வசூலித்து, காலி பாட்டிலை திரும்ப கொடுக்கும்போது, கூடுதல் தொகையை திரும்ப பெறும் திட்டம் திமுக ஆட்சியில் அறிவிக்கப்பட்டது. தவெக ஆட்சியில் இந்த திட்டம் குறித்து ஆய்வு செய்தபோது, மொத்தம் விற்பனையாகும் மதுபான பாட்டில்களில் 50 சதவீதம் மட்டுமே திரும்ப வரும் நிலையில், 99 சதவீத பாட்டில் வரப்பெற்றதாக கணக்கு காட்டப்பட்டு, பெரும் தொகை கையாடல் செய்யப்பட்டது தெரியவந்தது. இந்தப் பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், மதுபானத்தின் விலையுடன் ரூ.10 கூடுதலாக சேர்த்து, அதை உச்சபட்ச விலையாக குறிப்பிட்டு வசூலிக்கும் திட்டத்தை நவ.1-ம் தேதி முதல் அரசு செயல்படுத்தியுள்ளது.

இந்த திட்டத்துக்கு பொதுமக்கள் வரவேற்பு தெரிவித்துள்ள நிலையில், டாஸ்மாக் பணியாளர்கள் எதிர்ப்பு தெரிவித்து தமிழகம் முழுவதும் கடைகளை அடைத்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அவர்களுடன் டாஸ்மாக் நிர்வாகம் நடத்திய பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படாத நிலையில், 2-ம் நாளாக நேற்றும் போராட்டம் நடந்தது. இந்தப் போராட்டத்தை கட்டுக்குள் கொண்டுவருவதில் அரசு தீவிரம் காட்டி வருகிறது. ”போராட்டத்தில் ஈடுபட்ட பணியாளர்களுக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டு, பணி நீக்க நடவடிக்கையையும் தொடங்கியுள்ளது. போராட்டம் தொடர்ந்தால், தற்காலிக பணியாளர்களைக் கொண்டு டாஸ்மாக் கடைகளை இயக்க தேவையான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருவதாக” அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மதுவிலக்கு ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் விக்னேஷ் கூறியதாவது: காலி பாட்டில்களை திரும்பப் பெறும் திட்டத்தில் நடைபெற்ற முறைகேட்டைத் தடுக்கவே இந்த திட்டத்தை கொண்டு வந்துள்ளோம். மது பாட்டிலில் குறிப்பிடப்பட்டுள்ள விலையை மட்டும் கொடுத்தால் போதுமானது. முன்பு என்ன விலையோ, அதே விலைக்குத்தான் மதுபானங்கள் விற்கப்படுகின்றன.

பாட்டில்களை திரும்பப் பெறும் இயந்திரம் பயன்பாட்டுக்கு வந்தவுடன், தமிழகத்தில் எந்த ஊரில் வாங்கிய பாட்டிலையும் எங்கும் செலுத்தி பணத்தை திரும்ப பெறலாம். பாட்டில்கள் இனி சாலையில் எங்கும் கிடந்தால், அதை எடுத்துக் கொடுத்து ரூ.10 பெற்றுக் கொள்வார்கள். இது பலருக்கு வாழ்வாதாரமாகும். சுற்றுச்சூழலும் காக்கப்படும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.



முந்தைய செய்தி
லாரிகளில் கடத்தப்பட்ட 71 டன் ரேஷன் அரிசி பறிமுதல்
அடுத்த செய்தி
US midterms unlikely to ease oil risks for India

தொடர்புடைய செய்திகள்