Search

Saved articles

You have not yet added any article to your bookmarks!

Browse articles

GDPR Compliance

We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

சிறப்பு பேருந்துகளில் 1.40 லட்சம் பேர் பயணம்

சிறப்பு பேருந்துகளில் 1.40 லட்சம் பேர் பயணம்

நவ. 5, 6, 7-ம் தேதிகளில் சென்னையில் இருந்து 15,659 பேருந்துகள் இயக்கப்படும்

பகிரவும் WhatsApp Facebook

சென்னையில் இருந்து வெளியூர்களுக்கு சிறப்பு பேருந்துகளில் 1.40 லட்சம் பேர் பயணம் செய்துள்ளனர் என்று போக்குவரத்து துறை தெரிவித்துள்ளது.

தீபாவளியையொட்டி வெளியூர்களுக்கு செல்லும் பயணிகள் வசதிக்காக நவ. 5, 6, 7-ம் தேதிகளில் சென்னையில் இருந்து 15,659 பேருந்துகள் இயக்கப்படும் என்று தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகம் அறிவித்திருந்தது. 


இதில் முதல் நாளான நேற்று முன்தினம் 2,191 வழக்கமான பேருந்துகள், 2,87 0சிறப்பு பேருந்துகள் உட்பட 5,061 பேருந்துகள் இயக்க தயார் நிலையில் இருந்தது. ஆனால் நேற்று முன்தினம் இரவு 12.00 மணி வரையில் 2,191வழக்கமான பேருந்துகள், 1,018 சிறப்பு பேருந்துகள், 156 தனியார் பேருந்துகள் என மொத்தம் 3,209 பேருந்துகள் சென்றுள்ளன.


முதல் நாளான நேற்று சென்னையில் இருந்து 1 லட்சத்து 40 ஆயிரம் பேர் வெளியூர்களுக்கு ஊருக்கு புறப்பட்டுச் சென்றதாக போக்குவரத்து துறை அறிவித்துள்ளது. இன்று முதல் திங்கள் வரை 3 நாட்கள் விடுமுறையாகும்.

 நேற்று பிற்பகல் முதலே கிளம்பாக்கம், கோயம்பேடு, மாதாவரம், மறைமலைநகர் பேருந்து நிலையங்களில் கூட்டம் அலை மோதியது. இதனால் இந்தப் பகுதிகளுக்குச் செல்லும் சாலைகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

முந்தைய செய்தி
பின்னலாடை துறையில் சுற்றுச்சூழல் நடைமுறைகளை வலுப்படுத்த ஒப்பந்தம்
அடுத்த செய்தி
இந்தியாவின் கிடங்கு குத்தகை 12 சதவீதம் வளர்ச்சி

தொடர்புடைய செய்திகள்