Search

Saved articles

You have not yet added any article to your bookmarks!

Browse articles

GDPR Compliance

We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

பின்னலாடை துறையில் சுற்றுச்சூழல் நடைமுறைகளை வலுப்படுத்த ஒப்பந்தம்

பின்னலாடை துறையில் சுற்றுச்சூழல் நடைமுறைகளை வலுப்படுத்த ஒப்பந்தம்

இந்த திட்டத்தின் கீழ், சங்கத்துக்கான ஆலோசகராகவும், திட்ட ஒருங்கிணைப்பாளராகவும் அசிபோ நிறுவனம் செயல்படும்.

பகிரவும் WhatsApp Facebook

திருப்பூர் பின்னலாடைத் தொழில்துறையின் நிலைத்தன்மைத் தரநிலைகளை மேம்படுத்தி, சர்வதேச சந்தையில் போட்டித் திறனை வலுப்படுத்தும் நோக்கில், திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்கம் (TEA), கோவையைச் சேர்ந்த அசிபோ இன்ஃபோடெக் நிறுவனத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது.

இதன்படி, குழும அடிப்படையிலான சுற்றுச்சூழல், சமூக மற்றும் நிர்வாக நடைமுறைகளை மேம்படுத்தும் திட்டத்தை சங்கம் தொடங்கியுள்ளது.

இந்த திட்டத்தின் கீழ், சங்கத்துக்கான ஆலோசகராகவும், திட்ட ஒருங்கிணைப்பாளராகவும் அசிபோ நிறுவனம் செயல்படும். இதில் பங்கேற்கும் உறுப்பினர் நிறுவனங்களின் சுற்றுச்சூழல் செயல்பாடுகளைத் திட்டமிடுதல், செயல்படுத்துதல், கண்காணித்தல் மற்றும் தொடர்ந்து மேம்படுத்துதல் ஆகியவற்றுக்குத் தேவையான ஆலோசனைகளையும் தொழில்நுட்ப ஆதரவையும் வழங்கும்.

இதன் மூலம், உறுப்பினர் நிறுவனங்கள் சுற்றுச்சூழல் பாதுகாப்பு, சமூகப் பொறுப்பு, சிறந்த நிர்வாக நடைமுறைகள் மற்றும் நிலைத்தன்மை சார்ந்த அறிக்கையிடல் ஆகியவற்றில் தங்களது செயல்திறனைப் படிப்படியாக மேம்படுத்திக்கொள்ள வழிவகை செய்யப்படும்.

சர்வதேச ஆடை வர்த்தகத்தில் முன்னணி நிறுவனங்கள் மற்றும் கொள்முதல் நிறுவனங்கள் (Buyers), பொறுப்பான கொள்முதல், விநியோகச் சங்கிலியின் வெளிப்படைத்தன்மை, சுற்றுச்சூழல் பாதுகாப்பு, சமூகப் பொறுப்பு மற்றும் ESG தரநிலைகளுக்கு அதிக முக்கியத்துவம் அளித்து வருகின்றன. 

இந்தச் சூழலில், சர்வதேச சந்தையின் எதிர்பார்ப்புகளுக்கு ஏற்ப திருப்பூர் ஏற்றுமதி நிறுவனங்களைத் தயார்படுத்துவதுடன், சர்வதேச வர்த்தக நிறுவனங்களின் நம்பிக்கையைப் பெறவும் இந்த முன்னெடுப்பு உதவும் என எதிர்பார்க்கப்படுகிறது.

முந்தைய செய்தி
கோவை நூலக புத்தக கொள்முதல் முறைகேடு குறித்து விசாரணை - அமைச்சர் ராஜ்மோகன் தகவல்
அடுத்த செய்தி
சிறப்பு பேருந்துகளில் 1.40 லட்சம் பேர் பயணம்

தொடர்புடைய செய்திகள்