Search

Saved articles

You have not yet added any article to your bookmarks!

Browse articles

GDPR Compliance

We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

கோவை நூலக புத்தக கொள்முதல் முறைகேடு குறித்து விசாரணை - அமைச்சர் ராஜ்மோகன் தகவல்

கோவை நூலக புத்தக கொள்முதல் முறைகேடு குறித்து விசாரணை - அமைச்சர் ராஜ்மோகன் தகவல்

‘பெரியார் அறிவுலகம்’ எனும் பெயரில் ரூ. 300 கோடி மதிப்பில் திமுக ஆட்சியில் நூலகம் அமைக்கப்பட்டது.

பகிரவும் WhatsApp Facebook

கோவையில் தொடங்கப்பட்டுள்ள பெரியார் அறிவுலகம் நூலகத்துக்கான புத்தகங்கள் கொள்முதல் செய்யப்பட்டதில் நடந்த முறைகேடு குறித்து விசாரணை தொடங்கியுள்ளதாக பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் ராஜ்மோகன் தெரிவித்துள்ளார்.

கோவை காந்திபுரத்தில் ‘பெரியார் அறிவுலகம்’ எனும் பெயரில் ரூ. 300 கோடி மதிப்பில் திமுக ஆட்சியில் நூலகம் அமைக்கப்பட்டது. கடந்த மாதம் 16-ம் தேதி இந்த நூலகத்தை முதல்வர் விஜய் தொடங்கி வைத்தார்.


இந்நிலையில், இந்த நூலகத்துக்கு புத்தகங்களை வாங்குவதில் மிகப்பெரிய அளவில் ஊழல் நடைபெற்றுள்ளதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. குறிப்பிட்ட பதிப்பகத்தில் இருந்து அதிக விலை கொடுத்து புத்தககங்கள் வாங்கப்பட்டுள்ளதாக எழுத்தாளர்கள் தரப்பில், ஆதாரங்களுடன் புகார் எழுப்பப்பட்டுள்ளது.


இந்நிலையில் சென்னையில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அமைச்சர் ராஜ்மோகன், "பெரியார் அறிவுலகத்துக்கு புத்தகங்கள் வாங்கியதில் ஊழல் நடந்துள்ளதாக எழுத்தாளர் பெருமாள் முருகன் ஒரு கட்டுரை எழுதியுள்ளார். பெரியார் அறிவுலகத்தில் வைக்கப்பட்டுள்ள புத்தகங்களின் பெயர்களை எல்லாம் என் வாழ்நாளிலேயே நான் கேள்விப்பட்டதே இல்லை. ஒரே பதிப்பகத்தில் 1,500-க்கும் மேற்பட்ட புத்தகங்களை வாங்கியுள்ளனர். அப்படி ஒரு பதிப்பகம் செவ்வாய் கிரகத்தில் கூட இல்லை.


பெரியார் அறிவுலக நூலகத்திற்கு, கடந்த பிப்ரவரி மாதமே அவசர அவசரமாகப் புத்தகங்களை வாங்கியுள்ளனர். இது கடந்த ஆட்சியில் நடைபெற்ற மெகா ஊழலுக்கு மிகச்சிறந்த எடுத்துக்காட்டாகும். யாரென்றே தெரியாத ஒரு எழுத்தாளரின் பெயரில், கீழடி குறித்த ஒரு புத்தகம் இடம்பெற்றுள்ளது. 

அதில் ‘கீழடியில் எடுக்கப்பட்ட சிலை’ என்று கூகுளில் இருந்து ஒரு படத்தை எடுத்துப் போட்டுள்ளனர். ஆனால், அப்படி ஒரு சிலையே கீழடியில் கண்டெடுக்கப்படவில்லை. இதில் யார் சம்பந்தப்பட்டிருந்தாலும், அவர்கள் அனைவரும் நிச்சயமாகச் சட்டத்தின் முன் நிறுத்தப்படுவார்கள். இந்த விவகாரத்தில் நீதி நிலை நாட்டப்படும்" என்றார்.

முந்தைய செய்தி
புதிய இசிஎல் விதிகள் - ரிசர்வ் வங்கியிடம் விளக்கம் கேட்கும் வங்கிகள்
அடுத்த செய்தி
பின்னலாடை துறையில் சுற்றுச்சூழல் நடைமுறைகளை வலுப்படுத்த ஒப்பந்தம்

தொடர்புடைய செய்திகள்