Search

Saved articles

You have not yet added any article to your bookmarks!

Browse articles

GDPR Compliance

We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

சென்னையில் இருந்து 10 லட்சம் பேர் சொந்த ஊர்களுக்குப் பயணம்

சென்னையில் இருந்து 10 லட்சம் பேர் சொந்த ஊர்களுக்குப் பயணம்

சென்னையில் 5 இடங்களில் இருந்து சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படுகின்றன.

பகிரவும் WhatsApp Facebook

தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு சென்னையில் இருந்து சுமார் 10 லட்சம் பேர் சொந்த ஊர்களுக்குப் புறப்பட்டுச் சென்றுள்ளனர்.

பண்டிகைகால நெரிசலைத் தவிர்க்கும் வகையில் தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகம் சார்பில் சென்னையில் 5 இடங்களில் இருந்து சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படுகின்றன.


 கடந்த 5-ம் தேதி முதல் நேற்று வரை 15,659 பேருந்துகள் இயக்கத் திட்டமிடப்பட்டது. முதல் நாளான நவ. 5-ம் தேதி 2,870 சிறப்புப் பேருந்துகள் உட்பட 5,061 பேருந்துகள் இயக்கத் திட்டமிட்டிருந்த நிலையில் அன்று நள்ளிரவு வரை 3,209 பேருந்துகளில் மட்டுமே பயணிகள் சென்றனர். 

முதல் நாளில் 1.40 லட்சம் பயணிகள் சொந்த ஊர்களுக்குச் சென்றனர்.

நேற்று முன்தினம் 2,191 வழக்கமான பேருந்துகள், 3,240 சிறப்புப் பேருந்துகள் என மொத்தம் 5,431 பேருந்துகள் இயக்கத் திட்டமிடப்பட்டது. ஆனால், நேற்று முன்தினம் இரவு 12 மணி வரை 5,087 பேருந்துகள் இயக்கப்பட்டடன.

 அதாவது திட்டமிட்டதில் 93.67 சதவீத பேருந்துகள் இயக்கப்பட்டுள்ளன. அவற்றில் 2.39 லட்சம் பயணிகள் பயணம் செய்தனர். இதேபோல நேற்றும் ஏராளமானோர் பேருந்துகளில் பயணித்தனர். மேலும், ரயில்கள், சிறப்பு ரயில்கள் மற்றும் தனியார் கார்கள் உள்ளிட்ட வாகனங்கள் மூலம் 10 லட்சத்துக்கும் மேற்பட்டோர் சொந்த ஊர்களுக்குப் புறப்பட்டுச் சென்றனர்.

முந்தைய செய்தி
அக்டோபரில் 15.621 கோடி இ-வே பில் உருவாக்கம்
அடுத்த செய்தி
ரூ.8.18 கோடி வருவாய் ஈட்டிய தெற்கு ரயில்வே

தொடர்புடைய செய்திகள்