Search

Saved articles

You have not yet added any article to your bookmarks!

Browse articles

GDPR Compliance

We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

ரூ.8.18 கோடி வருவாய் ஈட்டிய தெற்கு ரயில்வே

ரூ.8.18 கோடி வருவாய் ஈட்டிய தெற்கு ரயில்வே

தெற்கு ரயில்வே அளித்த வருவாய் விவரங்களின்படி, மொத்தம் 67 சிறப்பு ரயில்கள் 71 சேவைகள் மூலம் ரூ.8,17,89,949 வருவாய் ஈட்டியது தெரியவந்துள்ளது.

பகிரவும் WhatsApp Facebook

ஆயுத பூஜை மற்றும் தசரா பண்டிகையையொட்டி வெளி மாவட்டங்களுக்கும், வெளி மாநிலங்களுக்கும் இயக்கப்பட்ட சிறப்பு ரயில்கள் மூலம் தெற்கு ரயில்வே ரூ.8.18 கோடி வருவாய் ஈட்டியுள்ளது.

நவராத்திரி, ஆயுத பூஜை, விநாயகர் சதுர்த்தி ஆகிய பண்டிகைகளுக்காக செம்டம்பர் மாதம் 67 சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டன. இந்தச் சிறப்பு ரயில்கள் தமிழக நகரங்களுக்கு இடையேயும், தமிழகத்தில் இருந்து வெளி மாநில நகரங்களுக்கும் இயக்கப்பட்டன. 67 சிறப்பு ரயில்களில் 65 ரயில்கள் தலா ஒருமுறை மட்டுமே இயங்கின.

தெற்கு ரயில்வே அளித்த வருவாய் விவரங்களின்படி, மொத்தம் 67 சிறப்பு ரயில்கள் 71 சேவைகள் மூலம் ரூ.8,17,89,949 வருவாய் ஈட்டியது தெரியவந்துள்ளது. இந்த சிறப்பு ரயில்களில், திருவனந்தபுரம் சென்ட்ரலில் இருந்து மங்களூர் வழியாக மதார் சந்திப்பு(அஜ்மீர்) வரை இயக்கப்பட்ட ரயில் அதிகபட்சமாக ரூ.46.56 லட்சம் வருவாய் ஈட்டி முதலிடத்தைப் பிடித்துள்ளது. ஒரே ஒரு முறை இயக்கப்பட்ட இந்த ரயில், பட்டியலில் அதிக வருவாய் ஈட்டிய சேவையாக உள்ளது. 

கோவை–ஜபல்பூர் ரயில் ரூ.24.99 லட்சம், எழும்பூர்–சந்திரகாசி ரயில் ரூ.21.47 லட்சம், சென்ட்ரல் – ஜோத்பூர் ரயில் ரூ.21.08 லட்சமும் வருவாய் ஈட்டியுள்ளன. சென்னை–மங்களூரு ரயில் ரூ.8.79 லட்சம், சென்னை–கொல்லம் ரயில் ரூ.13.05 லட்சம், சென்னை– கொல்லம் மற்றொரு ரயில் ரூ.14.05 லட்சமும் வருவாய் ஈட்டியுள்ளன.

  • தெற்கு ரயில்வே இயக்கிய 67 சிறப்பு ரயில்கள் - 71 சேவை- ரூ.8.17கோடி வருவாய்
  • தமிழ்நாட்டுக்குள் இயக்கிய 18 சிறப்பு ரயில்கள்- 22 சேவைகள் - ரூ.1.22கோடி

முந்தைய செய்தி
சென்னையில் இருந்து 10 லட்சம் பேர் சொந்த ஊர்களுக்குப் பயணம்
அடுத்த செய்தி
7 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை

தொடர்புடைய செய்திகள்