Search

Saved articles

You have not yet added any article to your bookmarks!

Browse articles

GDPR Compliance

We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

தட்டுப்பாடின்றி ஆவின் இனிப்புகள்: அமைச்சர் அறிவுறுத்தல்

தட்டுப்பாடின்றி ஆவின் இனிப்புகள்: அமைச்சர் அறிவுறுத்தல்

ஆவின் பாலகங்களில் இனிப்புகளின் இருப்பு, அவற்றை விற்பனை மையங்களுக்கு உரிய நேரத்தில் அனுப்புவதற்கான ஏற்பாடுகள் குறித்து அலுவலர்களிடம் அமைச்சர் கேட்டறிந்தார்.

பகிரவும் WhatsApp Facebook

தீபாவளி பண்டிகையையொட்டி, ஆவின் இனிப்பு வகைகளின் தரம் மற்றும் விற்பனை ஏற்பாடுகள் குறித்து பால்வளத் துறை அமைச்சர் சி.விஜயலட்சுமி நேற்று ஆய்வு செய்தார்.

சென்னை அம்பத்தூர் ஆவின் பால் பண்ணையில் நடைபெற்ற ஆய்வின்போது, பண்டிகைக்காகத் தயாரிக்கப்படும் இனிப்புகளின் உற்பத்திப் பணிகளை அவர் பார்வையிட்டார். அவற்றுக்குப் பயன்படுத்தப்படும் மூலப்பொருள்களின் தரம் மற்றும் இருப்பு குறித்தும் ஆய்வு செய்தார்.

தொடர்ந்து, ஆவின் பாலகங்களில் இனிப்புகளின் இருப்பு, அவற்றை விற்பனை மையங்களுக்கு உரிய நேரத்தில் அனுப்புவதற்கான ஏற்பாடுகள் குறித்து அலுவலர்களிடம் கேட்டறிந்தார்.

பண்டிகைக் காலத்தில் ஆவின் பால், பால் பொருள்கள் மற்றும் இனிப்பு வகைகளுக்கான தேவை அதிகரிக்கும் என்பதால், அதற்கேற்ப உற்பத்தி மற்றும் விநியோக ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

பொதுமக்களின் தேவைக்கேற்ப தரமான பொருள்கள் தட்டுப்பாடின்றிக் கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும் என்று அமைச்சர் அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார். இந்த ஆய்வில் ஆவின் இணை மேலாண்மை இயக்குநர் சு.அனிதா உள்ளிட்ட அதிகாரிகள் பங்கேற்றனர்.

முந்தைய செய்தி
ஐரோப்பாவில் விமானங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல்
அடுத்த செய்தி
செங்கல்பட்டில் ரூ.7,000 கோடியில் உலக வர்த்தக மையம்

தொடர்புடைய செய்திகள்