Search

Saved articles

You have not yet added any article to your bookmarks!

Browse articles

GDPR Compliance

We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

ஊழலின் ஊற்றுக்கண் திமுக என்பது உறுதியாகியுள்ளது: CM Vijay

ஊழலின் ஊற்றுக்கண் திமுக என்பது உறுதியாகியுள்ளது: CM Vijay

நூல்கள் கொள்முதல் செய்வதிலும் பார்த்துப் பார்த்து, தரமற்ற நூல்களாகப் பரிந்துரை செய்து ஊழல் செய்துள்ளதை உலகமே பார்த்துக் கைகொட்டிச் சிரிக்கிறது.

பகிரவும் WhatsApp Facebook

ஊழலின் ஊற்றுக்கண் திமுக என்பதற்கு, கோவை பெரியார் அறிவுலகத்தில் நடந்துள்ள புத்தகக் கொள்முதல் ஊழலே சாட்சியாகும் என்று முதல்வர் விஜய் குற்றம் சாட்டியுள்ளார்.

இது தொடர்பாக முதல்வர் விஜய் வெளியிட்டுள்ள சமூகவலைதளப் பதிவில் கூறியிருப்பதாவது: 

கடந்த திமுக ஆட்சியில் கோவையில் பெரியார் அறிவுலகம் உள்ளிட்ட புதிய நூலகங்களுக்கான நூல் பரிந்துரைக் குழு அமைக்கப்பட்டது. அக்குழுவில் நவீன இலக்கியங்கள் மற்றும் திறனாய்வு நூல்களைப் பரிந்துரைக்கும் குழுவில் பேராசிரியர் பெருமாள் முருகன் இடம்பெற்றிருந்தார். அவர், பெரியார் அறிவுலகத்திற்கு நூல் கொள்முதல் செய்யப்பட்டதில் ஊழல் நடந்துள்ளதை வெளிச்சத்திற்குக் கொண்டு வந்துள்ளார்.

ஊழல் இலக்கியம் படைப்பதில் திமுக உயர் ரகம்தான் என்பதும் தெரிய வந்துள்ளது. பெரியார் அறிவுலகத்தைப் பார்த்துப் பார்த்துக் கட்டியதாகத் தம்பட்டம் அடித்துக்கொண்ட திமுக தலைமை, இப்படி நூல்கள் கொள்முதல் செய்வதிலும் பார்த்துப் பார்த்து, தரமற்ற நூல்களாகப் பரிந்துரை செய்து ஊழல் செய்துள்ளதை உலகமே பார்த்துக் கைகொட்டிச் சிரிக்கிறது. இவ்வாறு முதல்வர் விஜய் தெரிவித்துள்ளார்.

திமுக பதிலடி

இதற்கு பதில் அளிக்கும் வகையில், திமுக தலைமை வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது: பெரியார் அறிவுலகத்தில் அகல் விளக்கு மற்றும் பீனிக்ஸ் பதிப்பகத்தின் போலியான நூல்களில் மட்டும் ஜூன் மாதம் என்று முத்திரை இடப்பட்டுள்ளது என்று அங்கிருப்பவர்கள் தெரிவிக்கிறார்கள்.

அதே பெரியார் அறிவுலகத்தில் உள்ள ‘வால்காவில் இருந்து கங்கை வரை’ போன்ற புகழ்பெற்ற மற்ற பதிப்பக நூல்கள் திமுக ஆட்சியின் மார்ச் மாத முத்திரையோடு உள்ளன.

அப்படியென்றால் போலி பதிப்பக புத்தகங்கள் எப்பொழுது வாங்கப்பட்டன? யார் முடிவு எடுத்தது? தவெக ஆட்சியில் யாருக்கு கமிஷன் போனது? கடந்த ஆட்சியில் நூலகங்களுக்கு புத்தகங்கள் வாங்குவதில் எந்தவிதமான ஒளிவு மறைவுமின்றி வெளிப்படையான முறையில் புத்தகங்களை கொள்முதல் செய்யப்பட்டது என்பதை பதிப்பாளர்களே அறிவர். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முந்தைய செய்தி
தீபாவளி உற்சாகத்தால் உயர்ந்த இனிப்பு விலை
அடுத்த செய்தி
தீபாவளி முகூர்த்தப் பங்குகள் - ஸ்டெர்லைட் டெக் 103% உயர்வு வாய்ப்பு

தொடர்புடைய செய்திகள்