Search

Saved articles

You have not yet added any article to your bookmarks!

Browse articles

GDPR Compliance

We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

முதல்வர் பயணத்திற்கும் இடைத்தேர்தலுக்கும் தொடர்பில்லை: வன்னி அரசு

முதல்வர் பயணத்திற்கும் இடைத்தேர்தலுக்கும் தொடர்பில்லை: வன்னி அரசு

எடப்பாடி பழனிசாமி அதிமுகவை பூஜ்ஜியம் ஆகிவிடாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். அக்கட்சி கரைந்து வருகிறது என அமைச்சர் தெரிவித்துள்ளார்.

பகிரவும் WhatsApp Facebook

முதல்வரின் தொடர் சுற்றுப்பயணத்துக்கும் இடைத்தேர்தலுக்கும் தொடர்பில்லை என்று அமைச்சர் வன்னி அரசு கூறினார்.

மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் சமூக நீதித்துறை சார்பில் விலையில்லா வீட்டுமனை பட்டா வழங்கும் விழா நேற்று நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் நிஷாந்த் கிருஷ்ணா தலைமையில், எம்எல்ஏ கல்லானை முன்னிலையில் நடைபெற்ற விழாவில், சமூக நீதித்துறை அமைச்சர் வன்னி அரசு, 112 பயனாளிகளுக்கு வீட்டுமனை பட்டாக்களை வழங்கினார்.

பின்னர் அமைச்சர் வன்னியரசு கூறியதாவது: 

கடந்த (திமுக) ஆட்சி கூட்டணியில் இருந்தபோதும் பல போராட்டங்கள் நடத்தி உள்ளோம். இன்றைக்கு ஆட்சியில் அங்கம் வகித்தபோதும், முரண்படும் இடங்களில் முதல்வரிடம் நேரடியாக சுட்டிக்காட்டுகிறோம். இதனால் வெளியில் போராட வேண்டிய அவசியம் இல்லை.

வெளிநாடுகளில் படிக்கும் மாணவர்களுக்கான கல்வி உதவித்தொகை ஒதுக்கீடு கடந்த முறை ரூ.84 கோடியாக இருந்ததை இந்த முறை ரூ.131 கோடி வரை பெற்று தந்துள்ளோம்.

அரசு கல்லூரிகள், அரசு உதவிபெறும் கல்லூரிகள், சுயநிதி கல்லூரி மாணவர்களுக்கான கல்வி உதவித்தொகை ரூ.3,500-ஆக இருந்ததை ரூ.12 ஆயிரமாக உயர்த்தியுள்ளோம். இடைத்தேர்தலை மையப்படுத்தித்தான் முதல்வர் தொடர்ந்து மக்களை சந்திக்கிறாரா என்ற கேள்விக்கு, முதல்வரின் தற்போதைய பயணத்துக்கும் இடைத்தேர்தலுக்கும் தொடர்பு இல்லை. எதிர்க்கட்சிகளும் அங்கு சென்று மக்களை சந்திக்கிறார்கள்.

அரசு நிகழ்ச்சிகளில் முதலில் வந்தே மாதரம் பாட வேண்டும் என மத்திய அரசு கூறியபோது, தமிழ்நாட்டில் முதலில் தமிழ்த்தாய் வாழ்த்துதான் பாடவேண்டும் என்று பேரவையில் தீர்மானம் நிறைவேற்றியது தவெக அரசு.

வக்பு வாரிய திருத்த சட்டம், கிறிஸ்தவ அமைப்புகளின் சொத்துகளை கைப்பற்ற கொண்டுவந்த சட்டங்களுக்கு எதிராகவும் இந்தியாவிலேயே முதலில் தமிழ்நாடு சட்டப்பேவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

பாஜகவுடன் இணைந்து செயல்படுகிறார்கள் என்றால் முதன்மையான இந்த இரு தீர்மானங்களையும் தவெக அரசு கொண்டு வந்திருக்காது. இதை திமுகவும் சட்டமன்றத்தில் வரவேற்றது. எடப்பாடி பழனிசாமி அதிமுகவை பூஜ்ஜியம் ஆகிவிடாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். அக்கட்சி கரைந்து வருகிறது.

அம்பாசமுத்திரத்தில் பொது வேட்பாளர் என சீமான் தான் கூறிக்கொள்கிறார். இவ்வாறு அமைச்சர் கூறினார்.

முந்தைய செய்தி
ரயிலில் இரவு 9 மணி முதல் காலை 6 மணி வரை தூங்க அனுமதி - நீதிமன்றம் மறுப்பு
அடுத்த செய்தி
கரையைக் கடந்த முரசு புயல் - தமிழகத்தில் கனமழை எச்சரிக்கை!

தொடர்புடைய செய்திகள்