Search

Saved articles

You have not yet added any article to your bookmarks!

Browse articles

GDPR Compliance

We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

தவெக எம்எல்ஏவிடம் ரூ.30 கோடி பேரம் - அதிமுக பிரமுகர் கைது

தவெக எம்எல்ஏவிடம் ரூ.30 கோடி பேரம் - அதிமுக பிரமுகர்  கைது

ரூ.30 கோடி வரை பேரம் பேசப்பட்டதாக மதுரை மத்திய தொகுதி தவெக எம்எல்ஏ முஸ்தபா குற்றம்சாட்டினார்.

பகிரவும் WhatsApp Facebook

தவெக எம்எல்ஏவிடம் ரூ.30 கோடி குதிரை பேரம் பேசியது தொடர்பான விவகாரத்தில், மதுரை அதிமுக பிரமுகர் பி.எம்.மன்னன் நேற்று கைது செய்யப்பட்டார்.

தவெக அரசை கவிழ்க்க அதிமுக, திமுக தரப்பில் தொடர்ந்து முயற்சிகள் நடைபெறுவதாக அமைச்சர்கள் குற்றம்சாட்டி வந்தனர். இந்நிலையில், அதிமுக தரப்பில் இருந்து தன்னைத் தொடர்புகொண்டு, நம்பிக்கை வாக்கெடுப்பில் எதிர்த்து வாக்களிக்க ரூ.30 கோடி வரை பேரம் பேசப்பட்டதாக மதுரை மத்திய தொகுதி தவெக எம்எல்ஏ முஸ்தபா குற்றம்சாட்டினார்.


இதனடிப்படையில், மதுரை மாநகராட்சி முன்னாள் துணை மேயரும், அதிமுக கொள்கை பரப்பு துணைச் செயலாளருமான பி.எம்.மன்னனை மத்திய குற்றப்பிரிவு போலீஸார் கைது செய்தனர்.

 அவரிடம் தவெக எம்எல்ஏக்களிடம் பேரம் பேச சொன்னது யார், அதன் பின்னணியில் உள்ள முக்கியப் புள்ளிகள் யார் என்பது குறித்து கேள்விகளை எழுப்பி விசாரணை நடத்தினர்.
திமுகவில் மு.க.அழகிரியின் முக்கிய ஆதரவாளர்களில் ஒருவராக பி.எம்.மன்னன் செயல்பட்டு வந்தார். 

மதுரை மாநகராட்சி துணை மேயராகவும் பதவி வகித்துள்ளார். மு.க.அழகிரி ஆதரவாளர் என்பதால் திமுகவில் ஓரம்கட்டப்பட்ட நிலையில், கடந்த பொதுத் தேர்தலுக்கு முன்னதாக அவர் அதிமுகவில் தன்னை இணைத்துக் கொண்டது குறிப்பிடத்தக்கது.

முந்தைய செய்தி
தமிழகத்தில் தொழில் முதலீடுகளை ஊக்குவிக்க புதிய ஆணையம்
அடுத்த செய்தி
பக்தர்களின் கவனத்திற்கு.. சபரிமலை சிறப்பு ரயிலுக்கு முன்பதிவு தொடக்கம்

தொடர்புடைய செய்திகள்