Search

Saved articles

You have not yet added any article to your bookmarks!

Browse articles

GDPR Compliance

We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

பக்தர்களின் கவனத்திற்கு.. சபரிமலை சிறப்பு ரயிலுக்கு முன்பதிவு தொடக்கம்

பக்தர்களின் கவனத்திற்கு.. சபரிமலை சிறப்பு ரயிலுக்கு முன்பதிவு தொடக்கம்

சபரிமலை வாரந்திர சிறப்பு ரயில்களை தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

பகிரவும் WhatsApp Facebook

சபரிமலை செல்பவர்களுக்கு வசதியாக சென்னையில் இருந்து நவம்பர், டிசம்பர், ஜனவரி மாதங்களில் சபரிமலை வாரந்திர சிறப்பு ரயில்களை தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.


இதன்படி சென்னை எழும்பூரில் இருந்து நவ.19 முதல் ஜன.21ம் தேதி வரை வியாழக்கிழமைகளில் இரவு 11.40 மணிக்கு புறப்படும் சிறப்பு ரயில் (06117) மறுநாள் மாலை 4.30 மணிக்கு கொல்லம் சென்றடையும். மீண்டும் கொல்லத்தில் இருந்து நவ.20 முதல் ஜன.22ம் தேதி வரை வெள்ளிக்கிழமைகளில் மாலை 06.45மணிக்கு புறப்படும் சிறப்பு ரயில் (06118), மறுநாள் பகல் 12.30 மணிக்கு எழும்பூர் வந்தடையும்.

இதேபோல், சென்னை எழும்பூரில் இருந்து நவ.21 முதல் ஜன.23ம் வரை சனிக்கிழமைகளில் இரவு 11.40 மணிக்கு புறப்படும் சிறப்பு ரயில் (06121) மறுநாள் மாலை 4.30 மணிக்கு கொல்லம் சென்றடையும்.
மீண்டும் கொல்லத்தில் இருந்து நவ.22 முதல் ஜன.24ம் வரை ஞாயிற்றுக்கிழமைகளில் மாலை 6.45மணிக்கு புறப்படும் சிறப்பு ரயில் (06122), மறுநாள் பகல் 11.40 மணிக்கு சென்னை சென்ட்ரல் வந்தடையும்.


மேலும் சென்னை சென்ட்ரலில் இருந்து நவ.18 முதல் ஜன.20ம் வரை புதன்கிழமைகளில் மாலை 03.10 மணிக்கு புறப்படும் சிறப்பு ரயில் (06119) மறுநாள் காலை 07.20 மணிக்கு கொல்லம் சென்றடையும். மீண்டும் கொல்லத்தில் இருந்து நவ.19 முதல் ஜன.21ம் தேதி வரை வியாழக்கிழமைகளில் காலை 10.40மணிக்கு புறப்படும் சிறப்பு ரயில் (06120), மறுநாள் பிற்பகல் 03.30 மணிக்கு சென்னை சென்ட்ரல் வந்தடையும்.

கடைசியாக சென்னை சென்ட்ரலில் இருந்து நவ.16 முதல் ஜன.25 வரை திங்கட்கிழமைகளில் இரவு 11.50 மணிக்கு புறப்படும் சிறப்பு ரயில் (06083) மறுநாள் மாலை 04.30 மணிக்கு கொல்லம் சென்றடையும்.


மறுபடியும் கொல்லத்தில் இருந்து நவ.17 முதல் ஜன.26ம் தேதி வரை செவ்வாய்க்கிழமைகளில் மாலை 06.45 மணிக்கு புறப்படும் சிறப்பு ரயில் (06122), மறுநாள் பகல் 11.40 மணிக்கு சென்னை சென்ட்ரல் வந்தடையும்.
இச்சிறப்பு ரயில்களுக்கான முன்பதிவு இன்று சனிக்கிழமை காலை 8 மணிக்கு தொடங்கும்.

முந்தைய செய்தி
தவெக எம்எல்ஏவிடம் ரூ.30 கோடி பேரம் - அதிமுக பிரமுகர் கைது
அடுத்த செய்தி
6ஜி சேவை - ஜிஎஸ்எம்ஏ முக்கிய தகவல்

தொடர்புடைய செய்திகள்