Search

Saved articles

You have not yet added any article to your bookmarks!

Browse articles

GDPR Compliance

We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

பேட்டரி உதிரி பாகங்கள் தயாரிக்க 61% வரை கூடுதல் செலவு

பேட்டரி உதிரி பாகங்கள் தயாரிக்க 61% வரை கூடுதல் செலவு

பேட்டரி செல் தயாரிப்புச் செலவில் உதிரி பாகங்கள் மட்டும் சுமார் 76 சதவீதம் பங்கு வகிக்கின்றன

பகிரவும் WhatsApp Facebook

வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பேட்டரி உதிரிபாகங்களைவிட, இந்தியாவில் அவற்றைத் தயாரிக்க 18 முதல் 61 சதவீதம் வரை கூடுதல் செலவாகிறது என நெட்ஜீரோ எனர்ஜி டிரான்சிஷன் அலையன்ஸ், ஏஆர்சிஐ, சிஎஸ்ஐஆர்-என்சிஎல், ஐஐடி மெட்ராஸ் மற்றும் டெலாய்ட் ஆகிய அமைப்புகள் இணைந்து வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


பேட்டரியில் மின்சாரத்தைச் சேமிக்கவும், வெளியிடவும் உதவும் கேத்தோடு, அனோடு மற்றும் தாமிரத் தகடுகள் ஆகியவற்றின் உற்பத்திச் செலவு இந்தியாவில் அதிகமாக உள்ளது. 20-க்கும் மேற்பட்ட இந்திய நிறுவனங்களிடமிருந்து பெறப்பட்ட தரவுகளின் அடிப்படையில் இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது. சர்வதேச பேட்டரி உதிரிபாக விநியோகத்தில் சீனாவின் ஆதிக்கம் அதிகமாக உள்ளதாகவும் சுட்டிக்காட்டியுள்ளது.

பேட்டரி செல் தயாரிப்புச் செலவில் உதிரி பாகங்கள் மட்டும் சுமார் 76 சதவீதம் பங்கு வகிக்கின்றன. இந்தியாவின் பேட்டரி தேவை கடந்தாண்டில் 33 ஜிகாவாட் அளவிலிருந்து, வரும் 2032-ம் ஆண்டில் 236 ஜிகாவாட் அளவாகவும், 2037-ம் ஆண்டில் 600 ஜிகாவாட் அளவாகவும் அதிகரிக்கும் எனக் கணிக்கப்பட்டுள்ளது.

ஆனால், 2032-ம் ஆண்டுக்கான கேத்தோடு, அனோடு உள்ளிட்டவற்றின் தேவையில் 3 சதவீதத்துக்கும் குறைவான அளவையே இந்தியாவின் தற்போதைய உற்பத்தித் திறன் பூர்த்தி செய்கிறது. இந்த இடைவெளியைக் குறைக்க, 25 சதவீத மூலதன மானியத்துடன் உற்பத்தி ஊக்கத்தொகை வழங்குவது, 5 முதல் 7 ஆண்டுகளுக்கு செயல்பாட்டு ஊக்கத்தொகை அளிப்பது அல்லது செமிகான் இந்தியா திட்டத்தைப் போல 50 சதவீத மூலதன மானியம் வழங்குவது என மூன்று பரிந்துரைகள் அறிக்கையில் முன்வைக்கப்பட்டுள்ளது.



முந்தைய செய்தி
பதிவுத்துறைக்கு ரூ.1,950 கோடி வருவாய்: அமைச்சர் லோகேஷ் தமிழ்செல்வன் தகவல்
அடுத்த செய்தி
முட்டை விலை உயர்வு - 5 நாட்களில் இவ்வளவா?

தொடர்புடைய செய்திகள்