Search

Saved articles

You have not yet added any article to your bookmarks!

Browse articles

GDPR Compliance

We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

பதிவுத்துறைக்கு ரூ.1,950 கோடி வருவாய்: அமைச்சர் லோகேஷ் தமிழ்செல்வன் தகவல்

பதிவுத்துறைக்கு ரூ.1,950 கோடி வருவாய்: அமைச்சர் லோகேஷ் தமிழ்செல்வன் தகவல்
சென்னையில், பதிவுத் துறை அதிகாரிகளின் பணித்திறன் குறித்த ஆய்வுக் கூட்டம் நடந்தது. இதில், பங்கேற்ற பதிவுத்துறை அமைச்சர் லோகேஷ் தமிழ்செல்வன் உள்ளிட்டோர்.

பதிவு செய்த ஆவணங்களை தாமதம் இல்லாமல் அன்றைய தினமே பொதுமக்கள் வழங்க மாவட்ட பதிவாளர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பகிரவும் WhatsApp Facebook

கடந்த அக்டோபரில் மட்டும் ரூ.1,950 கோடி வருவாயை தமிழ்நாடு பத்திரப்பதிவுத் துறை ஈட்டியுள்ளது என்று அமைச்சர் லோகேஷ் தமிழ்செல்வன் தெரிவித்துள்ளார்.


சென்னை பாரிமுனையி ல் வடக்கு மாவட்ட பதிவாளர் அலுவலக வளாகத்தில், பதிவுத்துறை அதிகாரிகளின் பணித்திறன் குறித்த ஆய்வுக் கூட்டம் வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் லோகேஷ் தமிழ்செல்வன் தலைமையில் நடந்தது.

இதில், அமைச்சர் லோகேஷ் தமிழ் செல்வன் தெரிவித்ததாவது: பதிவுத்துறையில் கடந்த அக்டோபரில் ரூ.1,950 கோடி வருவாய் ஈட்டிடயுள்ளது. இது முந்தையை நிதியாண்டு அக்டோபர் வருவாயைக் காட்டிலும் ரூ.147 கோடி அதிகமாகும்.

பதிவு செய்த ஆவணங்களை தாமதம் இல்லாமல் அன்றைய தினமே பொதுமக்கள் வழங்க மாவட்ட பதிவாளர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும். அரசின் வருவாயில் எவ்வித கசிவும் ஏற்படாமல் வசூலிக்க முழு கவனம் செலுத்த வேண்டும். அனைத்து அலுவலர்களும் அர்ப்பணிப்புடன் பணியாற்றி வருவாய் இலக்கை எட்ட வேண்டும் இவ்வாறு அவர் தெரிவித்தார்.

முன்னதாக, பதிவுத்துறை தொடர்பான உச்ச நீதிமன்ற மற்றும் உயர் நீதிமன்ற வழக்குகளைத் துல்லியமாகக் கண்காணிக்கவும், விரைந்து எதிர்வாதங்களை தயார் செய்து சட்டப்பூர்வ நடவடிக்கைகளை எடுக்கவும் ஏதுவாக, அதிநவீன செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தின் அடிப்படையிலான புதிய செயலியின் பயன்பாட்டினை அமைச்சர் தொடங்கி வைத்தார்.


முதல்வரால் கடந்த ஆகஸ்ட் 17-ல் தொடங்கி வைக்கப்பட்ட 'வருகையில்லா ஆவணப்பதிவு' திட்டத்துக்கு சிறப்பான வரவேற்பு கிடைத்துள்ளது. இந்த திட்டத்தில் நவம்பர் 3 வரை மனைப்பிரிவு, அடுக்குமாடி குடியிருப்பு ஆகியவற்றின் முதல் விற்பனை ஆவணங்கள், வங்கிகளுக்கான உரிமை ஒப்படைப்பு, ரத்து ஆவணங்கள் என மொத்தம் 2,46,260 ஆவணங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.



.

முந்தைய செய்தி
கும்பகோணத்தில் ரூ.3 லட்சத்துக்கு பருத்தி ஏலம்
அடுத்த செய்தி
பேட்டரி உதிரி பாகங்கள் தயாரிக்க 61% வரை கூடுதல் செலவு

தொடர்புடைய செய்திகள்