Search

Saved articles

You have not yet added any article to your bookmarks!

Browse articles

GDPR Compliance

We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

சூப்பர் ஃபாஸ்ட் ரயில்கள் முதல்முறையாக எக்ஸ்பிரஸாக மாற்றம்

சூப்பர் ஃபாஸ்ட் ரயில்கள் முதல்முறையாக எக்ஸ்பிரஸாக மாற்றம்

சில சூப்பர் ஃபாஸ்ட் ரயில்கள், எக்ஸ்பிரஸ் ரயிலாக மாற்றப்படுகின்றன.

பகிரவும் WhatsApp Facebook

கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படும் அதிவிரைவு(சூப்பர் பாஸ்ட்) ரயில்கள் முதல் முறையாக விரைவு (எக்ஸ்பிரஸ்) ரயில்களாக மாற்றப்படுகின்றன.

தென் மத்திய ரயில்வேயில் இருந்து ஆந்திரப் பிரதேச மாநில பகுதிகளை உள்ளடக்கிய தெற்கு கடற்கரை ரயில்வே மண்டலம் உருவாக்கப்பட்டது.
அதனால் தெற்கு ரயில்வே மண்டலத்தில் இருந்த ரேணிகுண்டா உள்ளிட்ட பகுதிகள் தெற்கு கடற்கரை ரயில்வேயில் இணைக்கப்பட்டன.


அதேபோல், தெற்கு ரயில்வே நிர்வாகத்தின் கீழ் இருந்த மங்களூர் பகுதிகள், கர்நாடக மாநிலப் பகுதிகளை உள்ளடக்கி தென் மேற்கு ரயில்வேக்கு மாற்றப்பட்டுள்ளன.
இந்த மாற்றங்கள் ரயில்வே முழுவதும் நடந்துள்ளன. மாற்றப்பட்ட பகுதிகளில் இயக்கப்பட்டு வந்த ரயில்களும் புதிய மண்டலங்களுக்கு மாற்றப்பட்டுள்ளன. அதனால் அந்த ரயில்களின் எண்களும் மாற்றப்படுகின்றன. கூடவே இவற்றில் சில சூப்பர் ஃபாஸ்ட் ரயில்கள், எக்ஸ்பிரஸ் ரயிலாக மாற்றப்படுகின்றன. அதனால் சூப்பர் ஃபாஸ்ட் கட்டணம் செலுத்தத் தேவையில்லை.

அதன்படி, மும்பை சிஎஸ்எம்டி-சென்னை சென்ட்ரல்-மும்பை சிஎஸ்எம்டி சூப்பர் ஃபாஸ்ட் எக்ஸ்பிரஸ் ரயில் (22159/22160) இனி வழக்கமான விரைவு ரயிலாக மாறறப்படுகிறது. கூடவே வண்டி எண்களும் 11075/11076 என மாற உள்ளது. அத்துடன் சென்னையில் புறப்படும் ரயில் மும்பைக்கு இனி பகல் 12.30 மணிக்கு பதிலாக பகல் 1.05 மணிக்கு போய்ச்சேரும்.

தமிழ்நாடு வழியாக இயக்கப்படும் யஸ்வந்த்புரம்-திருவனந்தபுரம் வடக்கு சூப்பர் ஃபாஸ்ட் எக்ஸ்பிரஸ் ரயில்(வண்டி எண்:12257/12258) இனி விரைவு ரயிலாக மாற்றப்படுகிறது. வண்டி எண்ணும் 16537/16538 என மாறுகிறது.

அதேபோல் தமிழ்நாடு வழியாக இயங்கும் சில ரயில்களின் வண்டி எண்கள் மட்டும் மாற்றப்படுகின்றன. அதன்படி, எர்ணாகுளம் சந்திப்பு-பாட்னா சூப்பர் ஃபாஸ்ட் எக்ஸ்பிரஸ் (22643/22644) ரயிலின் வண்டி எண் 16359/16360 ஆகவும், பெங்களூர்-திருப்பதி சூப்பர் பாஸ்ட் (22617/22618) வண்டி எண்கள் 16627/16628 ஆகவும் மாற்றப்படுகின்றன.

இந்த மாற்றங்கள் எல்லாம் ஜன.1ம் தேதி முதல் அமலுக்கு வருகிறது.

எவ்வளவு குறையும்?

சூப்பர் பாஸ்ட் ரயில், எக்ஸ்பிரஸ் ரயிலாக மாறுவதின் மூலம் வகுப்புகளுக்கு ஏற்ப ரூ.15 முதல் ரூ.75 வரை பயணிகள் கட்டணம் குறையும்.

  • முன்பதிவு இல்லாத வகுப்பு/2ம் வகுப்பு உட்காரும் வசதி : ரூ.15
  • 2ம் வகுப்பு தூங்கும் வசதி : ரூ.30
  • ஏசி உட்காரும் வசதி: ரூ.45
  • 3 அடுக்கு தூங்கும் வசதி: ரூ.45
  • 2 அடுக்கு தூங்கும் வசதி: ரூ.45
  • முதல் வகுப்பு தூங்கும் வசதி/உட்காரும் வசதி: ரூ.75

முந்தைய செய்தி
கையுறைகள் இன்றி ஹேர் கலர் - கோத்ரேஜ் புதிய அறிமுகம்
அடுத்த செய்தி
பணத்தை (பற்றி) எண்ணுவோம்!

தொடர்புடைய செய்திகள்