Search

Saved articles

You have not yet added any article to your bookmarks!

Browse articles

GDPR Compliance

We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

திருச்செந்தூரில் கந்தசஷ்டி விழா தொடக்கம்

திருச்செந்தூரில் கந்தசஷ்டி விழா தொடக்கம்

திருக்கல்யாணத்தன்று 2 லட்சம் பேரும் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

பகிரவும் WhatsApp Facebook

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் கந்தசஷ்டி பெருவிழா இன்று (செவ்வாய்க்கிழமை) தொடங்கி 16-ம் தேதி வரையில் நடைபெறுகிறது. இதையொட்டி முன்னேற்பாட்டுப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருவதாக இந்து சமய அறநிலையத்துறை தெரிவித்துள்ளது.

இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில், நவம்பர் 15-ம் தேதி சூரசம்ஹாரமும், 16-ம் தேதி திருக்கல்யாணமும் நடைபெற உள்ளன. முதல் ஐந்து நாட்களில் தினமும் ஒரு லட்சம் பக்தர்களும், சூரசம்ஹாரத்தன்று 6 லட்சம் பேரும், திருக்கல்யாணத்தன்று 2 லட்சம் பேரும் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.


இதையொட்டி, விரதம் இருக்கும் பக்தர்கள் தங்குவதற்காக 11 இடங்களில் 1,02,673 சதுர அடி பரப்பளவில் தற்காலிக கொட்டகைகள் அமைக்கப்படுகின்றன. 300 தற்காலிக கழிப்பறைகள் ஏற்படுத்தப்படுகின்றன. விழா நாட்களில் தினமும் 15 ஆயிரம் பக்தர்களுக்கு அன்னதானம், 6 லட்சம் குடிநீர் பாக்கெட்டுகள் விநியோகிக்கப்பட உள்ளன.


பக்தர்களின் பாதுகாப்புக்காக 5,000-க்கும் மேற்பட்ட போலீசார் பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர். 493 இடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் அமைக்கப்படுகின்றன. மேலும், 7 இடங்களில் மருத்துவ முகாம்கள், 8 ஆம்புலன்ஸ்கள், 4 தீயணைப்பு வாகனங்கள் தயார் நிலையில் வைக்கப்பட உள்ளன.

போக்குவரத்து வசதிக்காக 12 இடங்களில் தற்காலிக பேருந்து நிலையங்களும், 10 ஆயிரம் வாகனங்கள் நிறுத்தும் வசதியும் ஏற்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

முந்தைய செய்தி
கூடாரங்களில் புகுந்த வெள்ளம் - 5 பேர் உயிரிழப்பு
அடுத்த செய்தி
India, Lebanon hold first Foreign Office consultations

தொடர்புடைய செய்திகள்