Search

Saved articles

You have not yet added any article to your bookmarks!

Browse articles

GDPR Compliance

We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

கேபிஎம்ஜி இந்தியாவின் 'என்ரிச் 2026' புத்தாக்க விருதுகள்

கேபிஎம்ஜி இந்தியாவின் 'என்ரிச் 2026' புத்தாக்க விருதுகள்

கேபிஎம்ஜி இந்தியாவின் ‘என்ரிச் 2026’ புத்தாக்க விருதுகள் குறித்த அறிவிப்பு. புத்தாக்கம், புதிய தொழில்நுட்பங்கள் மற்றும் எரிசக்தித் துறையின் முன்னேற்றம் தொடர்பான தகவல்கள்

பகிரவும் WhatsApp Facebook

எரிசக்தி, இயற்கை வளங்கள் மற்றும் நிலைத்தன்மை சார்ந்த துறைகளில் திருப்புமுனை கண்டுபிடிப்புகளை நிகழ்த்திய 3 ஸ்டார்ட்-அப் நிறுவனங்கள் மற்றும் 3 பெருநிறுவனங்களுக்கு 'என்ரிச் 2026' புத்தாக்க விருதுகளை கேபிஎம்ஜி இந்தியா நிறுவனம் அறிவித்துள்ளது.


ஹரியானா மாநிலம், குருகிராமில் நேற்று நடைபெற்ற 'என்ரிச் 2026' நிகழ்வில், டெல்லி ஐஐடியின் எஃப்ஐடிடி அமைப்புடன் கேபிஎம்ஜி இந்தியா நிறுவனம்  இணைந்து நடத்திய தொழில்முனைவோர் புத்தாக்கப் போட்டி நடைபெற்றது. இதில் நாடு முழுவதிலுமிருந்து 30-க்கும் மேற்பட்ட ஸ்டார்ட்-அப் நிறுவனங்களும், பெருநிறுவனப் பிரிவில் 25-க்கும் மேற்பட்ட அமைப்புகளும் பங்கேற்றன.

இதில் தொழில் துறை நிபுணர்களின் மதிப்பீட்டிற்குப் பிறகு, சிறந்த 3 ஸ்டார்ட்-அப் மற்றும் 3 பெருநிறுவனங்களுக்குக் கேபிஎம்ஜி இந்தியா நிறுவனம் புத்தாக்க விருதுகளை அறிவித்தது. 


அதில், தொழில்முனைவோர் பிரிவில் வெற்றி பெற்ற வராஹா கிளைமேட் அக், பேட்கேர் லேப்ஸ் மற்றும் ஹனு ஏஐ ஆகிய ஸ்டார்ட்-அப் நிறுவனங்களுக்கு மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் நிதின் கட்கரி விருதுகளை வழங்கிப் பாராட்டினார். 


அதேபோல் பெருநிறுவனப் பிரிவில் லோஹும், என்டிபிசி மற்றும் சிராக்  ஆகிய நிறுவனங்களுக்கு மத்திய மின்சார ஆணையத்தின் தலைவர் கன்ஷ்யாம் பிரசாத் விருதுகளை வழங்கிப் பாராட்டினார்.

முந்தைய செய்தி
சூரிய ஒளி மின்சாரத்தை சேமிக்கும் திட்டம் அறிவிப்பு
அடுத்த செய்தி
Centre’s FY27 fiscal deficit may exceed target by ₹1.2 lakh crore

தொடர்புடைய செய்திகள்