Search

Saved articles

You have not yet added any article to your bookmarks!

Browse articles

GDPR Compliance

We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

சூரிய ஒளி மின்சாரத்தை சேமிக்கும் திட்டம் அறிவிப்பு

சூரிய ஒளி மின்சாரத்தை சேமிக்கும் திட்டம் அறிவிப்பு

சூரிய ஒளி மூலம் உற்பத்தி செய்யப்படும் மின்சாரத்தை சேமித்து, தேவைப்படும் நேரங்களில் பயன்படுத்துவதற்கான புதிய திட்டம் அறிவிப்பு.

பகிரவும் WhatsApp Facebook

தமிழகத்தில் சூரிய ஒளி மற்றும் காற்றாலை மூலம் உற்பத்தியாகும் உபரி மின்சாரத்தை பேட்டரிகளில் சேமித்து தேவைப்படும் நேரங்களில் பயன்படுத்தும் 'மின்கல ஆற்றல் சேமிப்பு அமைப்பு கொள்கை 2026' ஐ எரிசக்தி துறை அமைச்சர் சிடிஆர். நிர்மல் குமார் வெளியிட்டார்.

சென்னை அண்ணா சாலையில் உள்ள தமிழ்நாடு மின் வாரிய தலைமை அலுவலகத்தில் தமிழ்நாடு மின்சார வாரியம் மற்றும் தமிழ்நாடு பசுமை எரிசக்திக் கழகம் இணைந்து 2029-ம் ஆண்டிற்குள் 10 கிகா வாட் மின்கல ஆற்றல் சேமிப்புத் திறன் உருவாக்க தமிழ்நாடு மின்கல ஆற்றல் சேமிப்பு அமைப்பு கொள்கை மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி விண்ணப்ப வலைதளத்தையும் அமைச்சர் அறிமுகப்படுத்தினார்.

பின்னர் அவர் கூறியதாவது: பகலில் உற்பத்தியாகும் சூரிய ஒளி மின்சாரம் மற்றும் காற்றாலை மின்சாரத்தை ராட்சத லித்தியம் பேட்டரிகளில் சேமித்து வைக்கும் தொழில்நுட்பமே பிஸ் எனப்படுகிறது. தமிழகத்தில் மாலை 6 மணி முதல் இரவு 10 மணி வரை மின்சாரத்தின் பயன்பாடு உச்சத்தில் இருக்கும். அந்த நேரங்களில் சூரிய ஒளி இருக்காது.

இந்தத் தடையைப் போக்க, பகலில் சேமிக்கப்படும் உபரி மின்சாரத்தை, மாலை நேரங்களில் விநியோகிக்க இந்த புதிய கொள்கை வழிவகை செய்கிறது. ஏப்ரல் 2027 முதல் தமிழ்நாட்டில் புதிதாக 1 மெகாவாட் மற்றும் அதற்கு மேல் சோலார் அல்லது காற்றாலை மின் நிலையம் அமைப்பவர்கள், தங்களது உற்பத்தியில் குறைந்தது 10 சதவீதம் அளவை சேமிக்கும் பேட்டரி அமைப்புகளை உருவாக்குவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு பசுமை எரிசக்தி கழகம் இதற்கான ஒற்றைச் சாளர அனுமதி வழங்கும் முதன்மை அமைப்பாக செயல்படும். நிலம் ஒதுக்குவது முதல் திட்டத்தைக் கண்காணிப்பது வரை அனைத்தையும் இந்நிறுவனமே மேற்கொள்ளும்.

இத்திட்டத்தில் முதலீடு செய்து பேட்டரி அமைக்கும் நிறுவனங்களுக்கு, அடுத்த 10 ஆண்டுகளுக்கு மின்சாரத்தைக் கொண்டு செல்வதற்கான கட்டணங்கள் 100 சதவீதம் முழுமையாக ரத்து செய்து சலுகை அளிக்கப்பட்டுள்ளது இவ்வாறு அமைச்சர் கூறினார்.
முந்தைய செய்தி
புனே ஆலையில் உற்பத்தியை தொடங்கிய கார்னிங் நிறுவனம்
அடுத்த செய்தி
கேபிஎம்ஜி இந்தியாவின் 'என்ரிச் 2026' புத்தாக்க விருதுகள்

தொடர்புடைய செய்திகள்