Search

Saved articles

You have not yet added any article to your bookmarks!

Browse articles

GDPR Compliance

We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

இடைத்தேர்தலுக்காக ஒன்றிணையும் எதிர்க்கட்சிகள்: போட்டு உடைத்த திண்டுக்கல் சீனிவாசன்

இடைத்தேர்தலுக்காக ஒன்றிணையும் எதிர்க்கட்சிகள்: போட்டு உடைத்த திண்டுக்கல் சீனிவாசன்
மதுரை பேங்க் ஆப் இந்தியா வங்கியில் தேவர் சிலைக்கான தங்கக் கவசத்தை ஒப்படைத்த அதிமுக பொருளாளர் திண்டுக்கல் சீனிவாசன்.

விழா நிறைவை அடுத்து தேவர் சிலையில் இருந்து தங்கக் கவசம் அகற்றப்பட்டு, மதுரையில் உள்ள பேங்க் ஆப் இந்தியா வங்கி பெட்டகத்தில் மீண்டும் ஒப்படைக்கப்பட்டது.

பகிரவும் WhatsApp Facebook

தமிழகத்தில் எதிர்க்கட்சிகள் இணைந்து வியூகம் அமைத்து, இடைத்தேர்தலை சந்திக்க வாய்ப்புள்ளதாக அதிமுக பொருளாளர் திண்டுக்கல் சீனிவாசன் கூறினார்.

ராமநாதபுரம் மாவட்டம், பசும்பொன்னில் உள்ள முத்துராமலிங்க தேவர் நினைவிடத்தில் தேவர் ஜெயந்தி மற்றும் குருபூஜை விழா கடந்த அக்.30-ம் தேதி நடைபெற்றது. இந்த விழாவில் அதிமுக சார்பில் வழங்கப்பட்ட தங்கக் கவசம் தேவர் சிலைக்கு வழக்கம்போல அணிவிக்கப்பட்டது.

விழா நிறைவை அடுத்து தேவர் சிலையில் இருந்து தங்கக் கவசம் அகற்றப்பட்டு, மதுரையில் உள்ள பேங்க் ஆப் இந்தியா வங்கி பெட்டகத்தில் மீண்டும் ஒப்படைக்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்ட பிறகு திண்டுக்கல் சீனிவாசன் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

சென்னையில் நடைபெற்ற அதிமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் இடைத்தேர்தலுக்கு தயாராவது குறித்து ஆலோசிக்கப்பட்டது. அதிமுகவில் பிரச்சினை எதுவும் இல்லை. சிலர் மட்டுமே வெளியே சென்றுள்ளனர். இதனால் கட்சிக்கு எந்தப் பிரச்னையும் இல்லை என தெரிவித்தார்.

அம்பாசமுத்திரம் தொகுதியில் பொது வேட்பாளராக சீமான் போட்டியிட உள்ளதாகவும், இதற்கு திமுக ஆதரவளிக்க வாய்ப்புள்ளதாகவும் வெளியான தகவல் குறித்து செய்தியாளர்கள் கேட்டபோது, `தேர்தல் வரும்போது அதுபற்றி பேசலாம் என எடப்படாடி பழனிசாமி கூறியுள்ளார். கடந்த இடைத்தேர்தலில் ஆளும் கட்சிக்கு 35 சதவீத வாக்குகளே கிடைத்தன. எதிர் வாக்குகள் 65 சதவீதம் உள்ளன. எனவே, அடுத்துவரும் தேர்தல்களில் என்ன செய்தால் வெற்றி பெற முடியும் என்று பொதுச் செயலாளர் முடிவு செய்வார்’ என்றார்.

எதிர்க்கட்சிகள் ஒன்றாக சேர்ந்தால்தானே இதற்கு வாய்ப்பு? என்று செய்தியாளர்கள் கேட்டபோது; `எல்லாம் சேர்ந்துதான் வியூகம் அமைக்க வேண்டும். தேர்தல் அறிவிப்புக்கு பிறகு எங்கள் கட்சித் தலைவர் இதுகுறித்து ஆலோசனை செய்து அறிவிப்பார். இவ்வாறு அவர் கூறினார்.





முந்தைய செய்தி
தவெக அரசு பொறுப்புடன் செயல்பட வேண்டும் - மு.வீரபாண்டியன்
அடுத்த செய்தி
வெளிநாட்டு முதலீட்டாளர்களுக்கு வரிச் சலுகை

தொடர்புடைய செய்திகள்